crea ramakrishnan publication ramakrishnan died :மூத்த தமிழ் பதிப்பாளரும், 'க்ரியா' பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான 'க்ரியா' ராமகிருஷ்ணன் இன்று காலமானார். அவருக்கு வயது 76.
கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ராமகிருஷ்ணன் கொரோனாவில் இருந்து குணமானாலும் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகாததால் அபாயகட்டத்திலேயே உயிர்காக்கும் கருவிகளோடு சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில், ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் இன்று அதிகாலை காலமானார் .
பதிப்பகத்தின் சாதனைகளுள் ஒன்றாக தற்கால தமிழ் அகராதி இருந்து வருகிறது. சமீபத்தில்தான் இதன் திருத்தப்பட்ட மூன்றாவது பதிப்பு வெளியானது.புத்தக பதிப்பு துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தியவர். இத்துறையின் முன்னோடியாகவும் விளங்கியவர் 'க்ரியா ராமகிருஷ்ணன்'.
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல் பதிப்பு 1992-ம் ஆண்டு வெளியானது. 16 வருடங்களுக்கு பிறகு கழித்து, மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2008-ம் ஆண்டில் வெளியானது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, இடைப்பட்ட பொழுதில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கிய மூன்றாவது பதிப்பு பல்வேறு கடின முயற்சிக்கு பிறகு வெளியாகியது.
கொரோனாவில் இருந்து குணமானாலும் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்புகள் சீராகாததால் அபாயகட்டத்திலேயே உயிர்காக்கும் கருவிகளோடு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தமிழ் வாசகர்களும் எழுத்தாளர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”