தக்ஷின்சித்ரா, மொழி விழாவின் 3 வது ஆண்டை தொகுத்து வழங்க உள்ளது. தமிழ் மொழிக்கு மட்டுமல்லாது, கலாச்சார ரீதியாக பெருமை சேர்க்க உள்ளனர்.
மார்ச் 18 மற்றும் 19 நாட்களில் தக்ஷின்சித்ரா தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி விழாவை நடத்துகிறது.
உரு மற்றும் அவர்களது குழுவினர் யாழ் வாசித்து இசை நிகழ்வை நடத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து தமிழ் மொழியிலிருந்து மற்ற திராவிட மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் குறித்து தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் டி சங்கரா சரவணன் , பத்திரிக்கை ஆசிரியர் மினி கிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் வி. ராமகிருஷ்ணன் பங்கேற்கின்றனர்.
மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செஃப் கவுஷிக், டெரா எர்த் பூட்ஸின் நிறுவனர் மிரா மாறன் ஆகியோர் தமிழ் உணவும், கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேச உள்ளனர். எழுத்தாளர் பி.ஏ சரவணன், வல்லளார் வாழக்கை பற்றி உரையாற்றுகிறார். திருநங்கை எழுத்தாளர் நேகா மற்றும் நடிகா நட்ஜா, பதிப்பாளர் ஜீவா கரிகாலன் மற்றும் எழுத்தாளர் தீபா ஆகியோர் எல்லோரையும் உள்ளடக்கிய தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் பேச உள்ளனர்.
இந்நிகழ்ச்சியை நடத்தும் கலை இயக்குநர் எம் முகில் கூறுகையில் “இளம் தலைமுறை தமிழ் எழுத்தாளர்கள், எல்ஜிபிடிக்யூ சமூகத்தையும் உள்ளடக்கி படைப்புகளை எழுத வேண்டும்” என்று தெரிவித்தார்.