பா.ரஞ்சித் வெளியிடும் ‘நீலம்’ கலை இலக்கிய அரசியல் இதழ்; கலைஞர்களைக் கவனப்படுத்த முயற்சி

சினிமா இயக்கம், சினிமா தயாரிப்பு, பதிப்பகம், பண்பாட்டு மைய இயக்குனர் என்று வெற்றிகரமாக வலம்வரும் இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் கலை இலைக்கிய அரசியல் மாத இதழைத் தொடங்கியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

neelam magazine, director pa ranjith published neelam magazine, நீலம் மாத இதழ், நீலம், நீலம் கலை இலக்கிய அரசியல் இதழ், பா ரஞ்சித் வெளியிடும் நீலம் இதழ், neelam art and literature and politics magazine, neelam monthly magazine, நீலம், மாத இதழ், arts special magazine, neelam, dalit literature, dalit politics, pa ranjith

தமிழ் நவீன இலக்கியத்தில் தலித் இலக்கியத்தின் தாக்கம் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்ததைப் போல, தமிழ் சினிமா உலகில் இயக்குன பா.ரஞ்சித் வருகை பிறகு தலித் அரசியலைப் பேசும் சினிமாக்களுக்கான ஒரு பெரிய வெளி உருவாக காரணமாக இருந்தார்.

இயக்குனர், பா.ரஞ்சித் தான் இயக்கிய முதல் படம் அட்டகத்தியில், மாட்டுக்கறி, இழவு வீட்டில் பறை இசைக்கு பாடப்படும் பாடல், ஒரு தலித் இளைஞனின் காதல் என ஒரு ஜனரஞ்சகமாக கமர்சியல் சினிமாவை உருவாக்கினார். தலித் வாழ்க்கை சார்ந்த கதைகளுக்கும் சினிமா துறையில் ஒரு வணிகத்துக்கான வாய்ப்பு உள்ளது என்று அடையாளம் காட்டினார்.

தனது இரண்டாவது படமான, மெட்ராஸ் படத்தை மிகவும் நேர்த்தியாக உருவாக்கியதோடு, இதுவரை சினிமாவில் பேசப்பட்ட பொருத்தமில்லாத மெட்ராஸ் பாஷை என்பதை உடைத்து நிஜமான மெட்ராஸ் மக்களையும் அவர்கள் வாழ்க்கையையும் மொழியையும் அரசியலையும் காட்டினார். மெட்ராஸ், தமிழ் சினிமா துறையினரின் பல தவறான கற்பனை மனப்பதிவுகளை தகர்த்த சினிமா என்றால் அது மிகையல்ல. அதோடு, தலித் வாழ்க்கையை, தலித் அரசியலை, தலித் கொண்டாட்டத்தை சினிமா என்ற ஒரு பெரிய ஊடகத்தில், உருவாக்கி அதை வெகுஜனங்களும் கொண்டாடும்படி செய்தது பா.ரஞ்சித்தின் மிகப்பெரிய வெற்றி.

கவனிக்கும்படியாக 2 சினிமாக்களை மட்டுமே இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாய்ப்பு அளித்தார். பா.ரஞ்சித், ரஜினி நடிப்பில் இயக்கிய கபாலி, காலா ஆகிய 2 படமும் வெற்றி பெற்றது. காலா படம் வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் பா.ரஞ்சித் சினிமாவில் தலித் அரசியல் பேசுவதோடு மட்டுமில்லாமல், தலித் அரசியல் செயல்பாட்டிலும் ஈடுபட்டுவருகிறார். நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலம், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். இந்த படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

இதனிடையே, பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில், கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற இசை நிகழ்ச்சி, வானம் என்ற தலைப்பில் ஆயிரம் பறை இசைக் கலைஞர்கள் நிகழ்ச்சி, தலித் ஆளுமைகளின் சிலைகள் வடிப்பது என்று கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் செய்தார்.

இயக்குனர் பா.ரஞ்சித் அடிப்படையில் ஒரு ஓவியர். கவின் கலைக்கல்லூரியில் ஓவியம் பயின்றவர். அதன் வழியாக சினிமாவுக்கு வந்தவர். இலக்கியத்தின் மீதும் வாசிப்பின் மீதும் ஈடுபாடு கொண்டவர். அந்த வகையில், கடந்த ஆண்டு நீலம் பதிப்பகம் தொடங்கி புத்தகங்களை பதிப்பித்தார்.

அதன் தொடர்ச்சியாக இயக்குனர், பா.ரஞ்சித் நீலம் என்ற பெயரில் ஒரு கலை இலக்கிய அரசியல் மாத இதழை வெளியிட்டுள்ளார். தமிழில் இதுவரை கையெழுத்துப் பிரதிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட இலக்கிய சிறுபத்திரிகைகள் வெளி வந்துள்ளன. தமிழில் இலக்கிய சிறுபத்திரிகை வாசகர்கள் ஒரு கனிசமான அளவில் உள்ளனர். ஆனால், நீலம், அவற்றில் இருந்து மாறுபட்டு, சிறுகதை, கவிதை, பத்தி, கட்டுரை என்பதோடு மட்டுமல்லாம், குறிப்பாக, ஓவியர்களை கவனப்படுத்தும் விதமாக நீலம் கலை இலக்கிய அரசியல் மாத இதழ் அமைந்துள்ளது.

அம்பேத்கர் பௌத்தம் தழுவிய அக்டோபர் 14-ம் தேதி நீலம் இதழ் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இதழில், எழுத்தாளர் பெருமாள் முருகன் ஒர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் கட்டுரை, எழுத்தாளர் பாமா நேர்காணல், எழுத்தாளர் தமிழ்பிரபா எழுதிய கோசலை நாவலின் ஒரு அத்தியாயம் வெளியாகியுள்ளது. அதோடு, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுதிய ஜூமாயணம் சிறுகதை, நவீன் எழுதியுள்ள டிராகன் சிறுகதைகளும் வெளியாகி உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் மிகுந்த காலத்தில், எண்ணிக்கையில் பெரிய அளவில் விற்பனையாகும் பத்திரிகைகள் எல்லாம் தனது விற்பனை சந்தையை இழந்துள்ள இந்த சமயத்தில், இயக்குனர் பா.ரஞ்சித் ஒரு கலை இலைக்கிய அரசியல் மாத இதழைத் தொடங்கியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

நீலம் இதழின் பொருப்பாசிரியர் எழுத்தாளர் வாசுகி பாஸ்கர், இயக்குனர் பா.ரஞ்சித் இதழ் தொடங்குவதற்கான காரணம் பற்றி கூறுகையில், “நீலம் ஒரு மாத இதழ், இது ஒரு பதிப்பகம் நடத்தக்கூடிய இதழ். கலைக்கு மரியாதை செய்யும் வகையில் ஓவியங்களுடன் கொண்டுவர வேண்டும் என்பதுதான் திட்டம். ஓவியங்களின் வண்ணங்களுடன் மல்டிகலரில் கொண்டு வந்துள்ளோம். நீலம் இதழில் ஓவியர்களையும் கலைஞர்களையும் புதிய எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்துவதுதான் முக்கியமான விஷயமாக இருக்கும்.

இந்த இதழியின் முக்கியமான நோக்கம், வெறும் தகவல்களைக் கொடுக்கக்கூடியதாக இல்லாமல், இந்த இதழ், ஆங்கில ஓவிய இதழ் மாதிரி நூலகத்தில், வீடுகளில் சேகரித்து வைக்கக் கூடிய ஒரு இதழாக இருக்கும். ” என்று கூறினார்.

தொடர்ந்து, இதழின் உள்ளடக்கம் பற்றி கூறிய வாசுகி பாஸ்கர், “ஓவியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ஒரு ஓவியரைப் பற்றிய அறிமுகம், அவருடைய ஓவியங்களைப் பற்றிய அறிமுகம், முதல் இதழியில் ஓவியர் ஸ்ரீதர் எழுதுகிறார். ஒரு விரிவான திட்டங்களுடன் தொடங்குகிறோம்” என்று கூறினார்.

நீலம் தனி இதழ் விலை ரூ.100, ஆண்டு சந்தா ரூ.950 என்று விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலம் இதழ் வாசர்களுக்கு சென்னையிலும், சென்னைக்கு வெளியே, மாவட்ட தலைநகரங்களில் கிடைக்கும்படி செய்துள்ளோம் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Director pa ranjith released neelam monthly magazine for art and literature and politics

Next Story
விக்கிரமாதித்தனை நெஞ்சில் நிறுத்திய ஓவியர் ”அம்புலிமாமா” சங்கர் மரணம்Ambuli mama artist KC Shiva Sankaran Passed away
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com