கவிஞர் சந்திரகலா, சமூக அவலங்களை சாடி கவிதைகள் படைப்பதில் தனி அடையாளம் கொண்டவர். தேர்தல் தொடர்பான அவரது விழிப்புணர்வுக் கவிதை இது!
நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே
தேளின் கொடுக்கில்
தேன் வரும் என்பான்
தெருக் குழாயில்
பால் வரும் என்பான்
நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே
காலென்று சொல்லி உன்
கையை பிடிப்பான்
காரியம் ஆனதும்
கழுத்தையே நெரிப்பான்
நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே
குடிசைக்குள் கால் வைப்பான்
குழந்தைக்கும் பேர்வைப்பான்
தேர்தல் முடிந்தால் உன்
கூரைக்கு தீ வைப்பான்
நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே
விவசாயி தினக்கூலி
குறை கேட்டு கதறிடுவான்
கும்பிட்டு ஜெயித்து விட்டால் உன்
கோவணத்தை உருவிடுவான்
நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே
கல் வெச்ச மூக்குத்தி
கணிசமான தொகை தருவான்
அவன நம்பி வாக்களிச்சா
தாலிக்கொடி அறுத்திடுவான்
நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே
ஆராய விடாம உனக்கு
சாராயம் தர பார்ப்பான்
ஆகாது நாளை அவன்
ஜனநாயகத்தை கொலை செய்வான்
நம்பாதே அவனை நம்பாதே
நம்பாதே எவனையும் நம்பாதே
தேர்தலென்று வந்து விட்டால்
நீயே தான் எஜமானன்
சபலம் கொண்டு சாயாதே அது
அஞ்சு வருஷத்துக்கு அவமானம்!
(கவிஞர் க.சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு என்ற இடத்தைச் சேர்ந்தவர்)