பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்சொற்களை தெரிந்துக் கொள்ள இலவச தொலைப்பேசி எண்!

முதல் 10 இடங்களில் தமிழை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

பிறமொழி சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிய இலவச தொலைப்பேசி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள உள்ள அருங்காட்சியத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இரண்டு நாள் ஆட்சி மொழிக் கருத்தரங்கம், பயிலரங்கம் நடைப்பெற்றது. இந்த கருத்தரங்கத்தை அமைச்சர் க. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

பின்பு, பார்வையாளர்கள் மத்தியில் பேசிய அவர், பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். “ வெளிநாடுளில் வாழும் இந்தியர்களில் 52 சதவீதம் பேர் தமிழர்கள். அதில் அதிகம் பேர் பேசும் மொழியாக,  ஆட்சி மொழி உள்ளது. இதற்கான பட்டியலும் சமீபத்தில் வெளியாகியது.

அதில், தமிழ் மொழி 16 ஆவது இடத்தில் உள்ளது. அடுத்த மூன்றாடுகளில் முதல் 10 இடங்களில் தமிழை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  1லட்சத்திற்கும் மேல் தமிழர்கள் வாழும் 17 நாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும். பிற மொழிகளில் உள்ள சொற்களுக்கு நிகரான  தமிழ் சொற்கலை அறிந்துக் கொள்ள இலவச தொலைப்பேசி எண்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த எண்ணில், எந்த மொழியைச் சேர்ந்த, சொல்லுக்கு நேரான தமிழ் சொற்கள் என்ன என்பது விளக்கப்படும்.  பொதுமக்கள் தங்களுக்கு தெரியாத பிறமொழி சொற்களுக்கு உரிய தமிழ் சொல்லை  எளிமையாக தெரிந்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

இந்த கருத்தரங்களில்  இலக்கிய துறையில் இருந்து, 52 அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close