/indian-express-tamil/media/media_files/2025/08/15/book-release-in-cbe-2025-08-15-08-10-55.jpg)
இந்த புத்தகத்தை, கோயம்புத்தூர் பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். கிருஷ்ணன், மற்றும் ரூட்ஸ் குழும இயக்குநர் கவிதாசன் ஆகியோர் வெளியிட்டனர்.
சுதந்திரப் போராட்ட வீரரும் - மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான சுதந்திர செம்மல் பார்-அட்-லா' ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் கோவையில் வெளியிடப்பட்டது.
சட்டத் துறை, அரசியல், கூட்டுறவு இயக்கங்கள் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவரும், சேலத்தைச் சேர்ந்த மாமனிதரும், மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் நெருங்கிய நண்பருமான 'சுதந்திர செம்மல்', 'பார்-அட்-லா' ஆதிநாராயண செட்டியாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம், வெளியீட்டு விழா, கோவை, போத்தனூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
இந்த புத்தகத்தை, கோயம்புத்தூர் பாரதிய வித்யா பவன் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம். கிருஷ்ணன், மற்றும் ரூட்ஸ் குழும இயக்குநர் கவிதாசன் ஆகியோர் வெளியிட்டனர்.
இந்த விழாவில், வி.ஜ.எம். மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார் அப்பொழுது அவர் கூறியதாவது.
சுதந்திர செம்மல்' பார்ட்-அட்-லா ஆதிநாராயண செட்டியார், தனது கொள்ளுத்தாத்தா எனவும், அவரின் 150-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு இந்த வாழ்க்கை வரலாறு நூல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 1874 ஆண்டு, செப்டம்பா் மாதம் 22ம் தேதி பிறந்தவர் எனவும், சேலம் நகரின் முன்னணி தலைவராகவும், மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் என கூறினார். சட்டம், அரசியல், கூட்டுறவு இயக்கம் மற்றும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்தவர் எனவும், உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்தாலும், வழக்குரைஞர் பணியை விடுத்து பொது சேவையைத் தேர்ந்தெடுத்தவர் என்றார். பல்வேறு சுதந்திர போராட்டத்திற்காக தன்னை அற்பணித்தவர் அவரது வாழ்க்கை குறித்த நூலை வெளியிடுவது தனக்கு பெருமையாக உள்ளது என்று தெரிவித்து விடைபெற்றார்.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.