82 வயதான அன்னி எர்னாக்ஸ் தனது படைப்புகளில் துணிவு மற்றும் மருத்துவக் கூர்மையுடன் அவர் தனிப்பட்ட நினைவுகளின் வேர்கள், விலகல்கள் மற்றும் கூட்டுக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளார் என்று நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
ஸ்வீடன் அகாடமியின் நிரந்தர செயலாளரான மேட்ஸ் மால்ம் நோபல் பரிசு வெற்றியாளரை வியாழக்கிழமை ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் அறிவித்தார்.
ஒரு வாரம் முழுவதும் அறிவிக்கப்படும் நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள்கிழமை தொடங்கியது. நியாண்டர்தால் மனிதனின் டி.என்.ஏ- ரகசியங்களை கண்டுபிடித்த விஞ்ஞானிக்கு மருத்துவத்துகான நோபல் விருது வழங்கப்பட்டது.
சிறிய துகள்கள் பிரிக்கப்பட்டாலும் ஒன்றோடொன்று தொடர்பைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதைக் காட்டியதற்காக மூன்று விஞ்ஞானிகள் செவ்வாய்க்கிழமை இயற்பியலுக்கான பரிசை வென்றுள்ளனர்.
அதிக மருந்துகளை வடிவமைக்கப் பயன்படும் மூலக்கூறுகளை இணைக்கும் வழிகளை உருவாக்கிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு புதன்கிழமை வழங்கப்பட்டது.
வேதியியலுக்கான நோபல் பரிசு புதன்கிழமையும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும் அறிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துகான நோபல் பரிசு அக்டோபர் 10ஆம் தேதியும் அறிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பிரெஞ்சு எழுத்தாளர் அன்னி எர்னாக்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1940-இல் பிறந்த அன்னி எர்னாக்ஸ் நார்மண்டியில் உள்ள சிறிய நகரமான யெவ்டாட் நகரில் வளர்ந்தார். அன்னி எர்னாக்ஸ் தனது செழுமையான எழுத்தின் மூலம் “பாலினம், மொழி, வர்க்கம் தொடர்பான வலுவான ஏற்றத்தாழ்வுகளால் குறிக்கப்பட்ட வாழ்க்கையை ஆய்வு செய்கிறார்” என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
Journal du dehors மற்றும் La vie extérieure போன்ற புத்தகங்களை எழுதிய அன்னி எர்னாக்ஸ், தான் ஒரு புனைகதை எழுத்தாளர் என்பதைவிட “தன்னுடைய இனவியலாளர்” என்று கூறியுள்ளார்.
இவருடைய நான்காவது புத்தகமான லா ப்ளேஸ் ஒரு முக்கியமான இலக்கிய படைப்பாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவர் “தன் தந்தை மற்றும் அவரை அடிப்படையாக உருவாக்கிய முழு சமூக சூழலின் உணர்ச்சியற்ற உருவப்படத்தை உருவாக்கினார்” என்று நோபல் குழு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“