கல்வராயன் மலையில் அமைந்துள்ள அரசு உண்டு உரைவிட பள்ளி மாணவிகள், துப்பட்டாவை தூக்கி வீசி எழுத்தாளர் கீதா இளங்கோவனுக்கு வரவேற்பு அளித்தனர்.
Her stories என்ற இணையதளத்தில் கீதா இளங்கோவன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘துப்பட்டா போடுங்கதோழி’ என்ற நூலாக தொகுக்கப்பட்டது . பெண்களுக்கு இச்சமூகத்தில் உள்ள கட்டுபாடுகள், அறிவுரைகள் என்று எல்லாவற்றையும் மையமாக கொண்டு. இதை திரனாய்வு செய்யும் புத்தகம்தான் ‘துப்பட்டா போடுங்க தோழி’ . பெண்களின் பாதுகாப்பில் கவனம் கொண்ட நபர்களும் கூட துப்பட்டா போடுங்க என்று சொல்வதை, புத்தகத்தின் தலைப்பாக எழுத்தாளர் கீதா இளங்கோவன் தேர்வு செய்துள்ளார்.
பெண்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்தி, அவர்களை அடிமைகளாக செதுக்குகிறார்கள் என்பதையும், அதிலிருந்து எப்படி வெளியேறுவது என்ற கேள்விக்கும் இந்த புத்தகத்தில் விடை இருப்பதாக, இலக்கியவாதிகள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வராயன் மலை பகுதியில் அமைந்துள்ள அரசு பழங்குடியின மாணவிகளிடம் , கீதா இளங்கோவன் உரையாடச் சென்றார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக பள்ளி மாணவிகள் துப்பட்டாவை தூக்கி எறிந்து, அவரை வரவேற்றினர். இந்த வீடியோவை அவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.