Advertisment

புத்தாண்டுக் கவிதை

2022-ம் ஆண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் 2023-ம் ஆண்டை வரவேற்க தயாராகி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
புத்தாண்டுக் கவிதை

வல்லரசு பாரதம்.

Advertisment

            2023 புத்தாண்டுக் கவிதை.

       பெருந்தொற்றை எதிர்கொண்டோம்

       விரைவாக தடுப்பூசி தயாரித்தோம்

       இலவசமாய் இருமுற

       நம்மவர்க்குச் செலுத்தி மகிழ்ந்தோம்!

       O 

       நாடிவந்தோர் மட்டுமின்றி

       தேடிச்சென்று அண்டை அயல்

       நாட்டாருக்குக் கொடுத்துதவி

       உயிர்காத்து நின்றோம்!

       O

       பொறாமைக்காரனவன் பாகிஸ்தான்

       கொட்டமடக்கி காஷ்மீரில்

       வெற்றிக்கொடி நட்டோம்

       சீறிவந்த சிங்கமவன் சீனகாரனை

       பூனையாக்கி எல்லையில்

       புறமுதுகிடச் செய்தோம்!

       O

      கொக்கரிக்கும் அமெரிக்கா

      கோலோச்சும் ரஷியா

      தஞ்சாவூர் பொம்மையாய்

      நம் முன்னே…!

      O

      எந்நாட்டிற்கும் சளைக்காத

      போர் விமானம் 

      நீர்மூழ்கிக் கப்பல்

      சுயசார்பு பாரதம் சுதந்திரப் பாரதம்

      எக்காளசப்தம் எங்கும் முழங்குது…!

      O

      புதிய உதயம் 2023 இன்

      அற்புத விடியல் ஜி 20

      உலக நாடுகள்

      கூடிப்பிரியும் நேரம்

      வானமும் பூமியும்

      அதிர ஒலிப்போம்

      வல்லரசு பாரதம்

      வாழ்க…! வாழ்க!! வென்று.

               கவிஞர் கமல. செல்வராஜ்.

               அருமனை.

              அழைக்க: 9443559841

              அணுக: drkamalaru@gmail.com

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment