/indian-express-tamil/media/media_files/2025/08/17/kovai-book-the-investor-2025-08-17-16-27-41.jpeg)
எழுத்தாளர் நாகராஜ் பாலசுப்ரமணியம் எழுதி உருவாக்கிய "தி பிஹேவியரல் இன்வெஸ்டர்" புத்தகம் இந்தியாவின் முதல் 'மிரர் எடிஷன்' புத்தகம் என ’இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் வழங்கி கௌரவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த எழுத்தாளரும், தேசிய பங்குச்சந்தை சான்றிதழ் பெற்ற பங்குச்சந்தை நிபுணரும் மற்றும் பொருளாதார பத்திரிகையாளரான நாகராஜ் பாலசுப்ரமணியம் தனது நான்காவது புத்தகமான ‘தி பிஹேவியரல் இன்வெஸ்டர்' எனும் புத்தகத்தை உருவாக்கி, அதனை, ‘மிரர் எடிஷன்’ பிரதியாக வடிவமைத்து இன்று (ஆகஸ்ட் 17) கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த அத்யான் புக்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தின் இயல்பான பதிப்பை, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வேல்ராஜ் வெளியிட்டார். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின், துறைத் தலைவரும் பேராசிரியருமான அமன் குமார் துபே முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
இந்த புத்தகத்தின் மிரர் எடிஷனை பிரபல சமூக வலைதள பேச்சாளரும் சேரன் அகாடமியின் நிறுவனருமான ஹுசைன் அகமது வெளியிட்டார். பேச்சாளர் குருஞானாம்பிகா அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
புத்தகத்தின் ஆசிரியர் நாகராஜ் பாலசுப்ரமணியம் தனது புத்தகம் குறித்து கூறுகையில், “தனது நான்காவது பதிப்பாக இந்த புத்தகத்தை எழுதி அதனை புதிய முயற்சியாக, கண்ணாடி உதவியுடன் வாசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளேன். இதனை அச்சிடுவதற்குள் பல்வேறு சவால்களை சந்தித்தேன். இந்த புத்தகத்தில், உணர்ச்சிபூர்வமான சார்புகளும், அறிவாற்றல் சிக்கல்களும், மிக புத்திசாலித்தனமான முதலீட்டாளர்களைக் கூட எவ்வாறு விலையுயர்ந்த தவறுகளை செய்யத் தூண்டுகின்றது என்பதை விவரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காகவே இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகாரம் வழங்கி தன்னை பெருமை படுத்தியுள்ளது,” என்றார்.
பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.