அண்ணா பிறந்தநாள்: செப். 15 முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதி வரை சிறப்புக் கழிவு விலையில் 30% முதல் 50% வரை நூல்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

International Institute of Tamil Studies, world tamil studies institute, International Institute of Tamil Studies announces, ulagath thamizharaychi institute, ulagath thamizharaychi institute book will sale in discount, Anna birthday, அண்ணா பிறந்தநாள், செப். 15 முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை, tamil literature, tamil research, tamil

அறிஞர் அண்ணா பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாளை முன்னிட்டு, செப்டம்பர் 15 முதல் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பிறந்த நாள் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாளை முன்னிட்டு சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதி வரை சிறப்புக் கழிவு விலையில் 30% முதல் 50% வரை நூல்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “அண்ணா பிறந்தநாள் மற்றும் நிறுவன நாளை முன்னிட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள இலக்கணம், இலக்கியம், மருத்துவம், காலக் கணிதம் ஆகிய பொருண்மைகளில் அமைந்த நூல்கள் மற்றும் அகராதி, அரிய நூல்கள் அரசு போட்டித் தேர்வுக்கான கருவி நூல்கள், ஆகியன தமிழ் ஆய்வினை மேற்கொள்ளும் மாணவர்கள், தமிழார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செப்டம்பர் 15-ம் தேதி முதல் அக்டோபர் 30-ம் தேதி வரையிலான நாட்களில் 30 முதல் 50 சதவீதம் வரையிலான சிறப்புக் கழிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் நூல் விற்பனை வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை நேரடியாக நூல்கள் விற்பனை நடைபெறும். இணைய வழியிலும் தொகை செலுத்தி நூல்களைப் பெற்றுக் கொள்ளலாம். நூல் விவரங்களை http://www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: International institute of tamil studies announces book will sale in discount

Next Story
சர்வதேச மனித உரிமைகள் இயக்கத்தின் சி.எல்.ஆர் விருது தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிப்புCLR award awards announced, CLR award awards announced to many Tamil Writers, Charu Nivedita, Poet Amirtham Surya, சிஎல்ஆர் விருது, எழுத்தாளர் சாரு நிவேதிதா, அமிர்தம் சூர்யா, எழுத்தாளர் இந்துமதி, ஆர்னிகா நாசர், கலாபிரியா, Writer Indhumathi, Kala Priya, Best Experimental writer Charu Nivedita, Romance Amirtham Surya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com