தமிழ் எழுத்தாளர்களின் முக்கியமானவராக கருதப்படும் நபர் எழுத்தாளர் ஜெயமோகன். இவரின் அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர், வணங்கான், தாயார் பாதம், யானை டாக்டர், மயில் கழுத்து, நூறு நாற்காலிகள், ஓலைச்சிலுவை, மெல்லிய நூல், பெருவலி, கோட்டி, உலகம் யாவையும் உள்ளிட்ட சிறுகதைகள் முக்கியத்துவம் வாய்தது. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வம் படத்தின் கதையில் இவர் பங்காற்றியுள்ளார். மேலும் பல திரைப்படங்களுக்கு இவர் கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய வெண்முரசு நாவல் பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இவர் எழுதிய குருவி சிறுகதை பற்றி எழுத்தாளர் பவா பேசியது அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. பல கதைகளை எழுதிய ஜெயமோகன் அவர் வேலை செய்த அலுவலகத்தை பற்றி கதைகளை எழுதியதில்லை. இதில் குருவி கதை தனித்துவம் வாய்தது. பிஎஸ்என்எல் கேபிள் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பதிக்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் அறிமுக நிகழ்ச்சிக்காக மத்திய மந்திரி வரவிருக்கிறார். இந்த விஷயத்தில் பூ மாதிரி கேபிளை பதிக்கும் ஒரு நபர் வேண்டும் என்று உயர் அதிகாரி தேடுவார். அவரை காவல்துறையினர் கைது செய்திருப்பார்கள். இந்த வேலையை அவர்தான் செய்ய முடியும் என்பதால் இந்த உயர் அதிகாரி சமந்தபட்ட நபரை சிறையிலிருந்து அழைத்து வருவார். அவருக்கும் அந்த உயர் அதிகாரிகும் நடக்கும் உயரையாடல் தான் படம் “ என் அப்பனுக்கும் அப்பனை போலத்தான் இத்துறை எனக்கும். சிறு வயதில் படிப்பு வரவில்லை என்று எனது அப்பா என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டார். இதுபோலத்தான் நான் கடினமாக உழைத்த உழைப்பை எனது துறை மதிக்காமல் இருக்கிறது. நீங்கள் கூட காரியம் ஆக வேண்டும் என்று என்னை சந்திக்க வந்திருக்கிறீர்கள் என்று கூறுவார். அப்படி இல்லை என்று நீ ஒரு கலைஞன் என்று அந்த உயர் அதிகாரி கூறுவார். இருவரின் உரையாடல்கள் நீளும். இறுதியாக குடிக்க பணம் கேட்டு குடித்துவிட்டு, நீங்கள் கேட்கும் வேலை செய்ய வேண்டும் என்றால் என்னை தவறாக பேசிய அதிகாரி மனிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவார். இனி என்ன செய்வது என்று அந்த உயர் அதிகாரி தவிப்பார். இந்நிலையில் இறுதியாக ஒரு குருவி கூட்டை எடுத்து பார்த்து, இந்த தொழில்நுட்பம் போல யாரால் செய்ய முடியும் என்று அந்த குருவி கூட்டை நெஞ்சோடு அணைத்து கொள்வார். அந்த வேலையை முடித்து தருவதாகவும் ஒப்புக்கொள்வார் .