ஜே.கே. ரவுலிங்கின் ‘தி ஹால்மார்க்டு மேன்’ நாவலில் இடம்பெற்ற ரகசியக் குறியீடு: பிக்பென் சைபர் என்றால் என்ன?

ஜே.கே ரவுலிங்கின் தி ஹால்மார்க்டு மேன், ஃப்ரீமேசன்கள் மற்றும் புரட்சியாளர்களால் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான குறியீடான பிக்பென் சைஃபரைக் கொண்டுள்ளது. அதன் வரலாறு இங்கே தருகிறோம்.

ஜே.கே ரவுலிங்கின் தி ஹால்மார்க்டு மேன், ஃப்ரீமேசன்கள் மற்றும் புரட்சியாளர்களால் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான குறியீடான பிக்பென் சைஃபரைக் கொண்டுள்ளது. அதன் வரலாறு இங்கே தருகிறோம்.

author-image
WebDesk
New Update
Galbraith

ராபர்ட் கால்பிரைத் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்ட பிரபலமான துப்பறியும் தொடரின் எட்டாவது நாவலான ஜே கே ரௌலிங்கின் சமீபத்திய நாவலான தி ஹால்மார்க்டு மேன் இல், கோர்மோரன் ஸ்ட்ரைக் என்ற துப்பறியும் நபர், ஒரு நவீன மர்மமாக மாறுவேடமிட்ட ஒரு பண்டைய புதிரை எதிர்கொள்கிறார். Photograph: (Wikimedia Commons/Robert Galbraith)

பிரபல எழுத்தாளர் ஜே.கே. ரவுலிங், ராபர்ட் கால்ப்ரைத் என்ற புனைப்பெயரில் எழுதிய துப்பறியும் நாவல் தொடரின் எட்டாவது நூலான ‘தி ஹால்மார்க்டு மேன்’-ல், துப்பறியும் நிபுணர் கோமோரன் ஸ்ட்ரைக் ஒரு புதிரான நவீன மர்மத்தைச் சந்திக்கிறார். அந்தக் குறியீடு பிக்பென் சைபர் என அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

இது குறித்து ரவுலிங் கூறுகையில், "இந்தப் புத்தகத்தில் ஸ்ட்ரைக் கண்டுபிடிக்க வேண்டிய ஒரு ரகசியக் குறியீடு உள்ளது. பிக்பென் சைபர் ஒரு எளிய மாற்றுக்குறியீடு. ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு குறியீடு உள்ளது. இதன் ரகசியத்தை அறிந்தவர்களுக்கு இதை உடைப்பது மிகவும் எளிது. இது ஃபிரீமேசன்ஸ் சைபர் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போதைக்கு இதைத் தவிர நான் அதிகம் கூற முடியாது," என்றார்.

குறியீட்டின் வரலாறு

பிக்பென் சைபரின் தோற்றம் குறித்த உறுதியான தகவல்கள் இல்லை. ஆரம்ப காலத்தில் ரபிக்கள் (யூத மத போதகர்கள்) ஹீப்ரு நூல்களைக் குறியீடாக்க இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 1531-ல் ஜெர்மானிய தத்துவஞானி ஹெயின்ரிச் கொர்னேலியஸ் அக்ரிப்பா எழுதிய ‘திரீ புக்ஸ் கன்செர்னிங் ஆக்கல்ட் ஃபிலாசபி’ என்ற புத்தகத்தில் இதன் பயன்பாடு இடம்பெற்றுள்ளது.

பிக்பென் சைபர், ஐரோப்பாவின் அரசியல் புரட்சிகளிலும் பயன்படுத்தப்பட்டது. 18-ம் நூற்றாண்டில் ஃபிரீமேசன்கள் (மத்திய கால கல் தச்சர்களின் அமைப்பிலிருந்து உருவான ஒரு பழமையான மதச்சார்பற்ற அமைப்பு) இதை ஏற்றுக்கொண்டதால், இது ஃபிரீமேசன்ஸ் குறியீடு என அறியப்பட்டது. அமெரிக்கப் புரட்சியின்போது பிரிட்டிஷ் படைகளும் இக்குறியீட்டைப் பயன்படுத்தின. இதன் மூலம், இது எளிமையானதும், அதே சமயம் நடைமுறைக்கு ஏற்றதும் நிரூபிக்கப்பட்டது.

சீசர் சைபருக்கும் பிக்பென் சைபருக்கும் உள்ள வேறுபாடு

Advertisment
Advertisements

பிக்பென் சைபர், எழுத்துக்களை மாற்றி அமைப்பதற்குப் பதிலாக, கட்டங்கள் (grids) மற்றும் X-வடிவ அமைப்புகளில் குறியீடாக்குகிறது. இதனால் உருவாகும் குறியீடுகள் ரகசிய மொழி போல் காட்சியளிக்கின்றன.

சீசர் சைபர் என்பது ஜூலியஸ் சீசர் பயன்படுத்திய ஒரு எளிமையான குறியீட்டு முறையாகும். இதில் ஒவ்வொரு எழுத்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களுக்கு மாற்றப்பட்டு குறியிடப்படுகிறது.

கோமோரன் ஸ்ட்ரைக்கைப் பொறுத்தவரை, பிக்பென் சைபர் என்பது தீர்க்க வேண்டிய ஒரு புதிர். ஆனால், வாசகர்களுக்கு இது ஒரு ரகசிய விளையாட்டின் அழைப்பு. பாதுகாப்பை விட, நாடகம் மற்றும் குறியீடுகளைப் பற்றிய ஒரு பண்டைய விளையாட்டில் சேர்வதற்கான அழைப்பாகும்.

Literature

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: