Advertisment

எல்லாம் வந்து போகும்...

எல்லாம் வந்து போகும், இயற்கையின் பெரும் சீற்றம், புயலாய் பூகம்பமாய் வந்து போகும்...! கடலின் கடும் கோபம், சுனாமியாய் வந்து போகும்... மாமலையும் சிலநேரம் எரிமலையாகும்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
columnist kamal selvaraj, kamala selvaraj poem, kamal selvaraj poem on coronavirus, covid-19, கமல செல்வராஜ், கமல செல்வராஜ் கவிதைகள், கொரோனா வைரஸ் கவிதைகள், தமிழ் கவிதைகள், கோவிட்-19 கவிதைகள், literature, poem on covid-19 impact, tamil poem, tamil literature, corona virus poem, covid-19 poem, corona virus tamil poem, covid-19 tamil poem, lock down poem, writer kamal selvaraj poems

எல்லாம் வந்து போகும்

Advertisment

இயற்கையின் பெரும் சீற்றம்

புயலாய் பூகம்பமாய் வந்து போகும்...!

0

கடலின் கடும் கோபம்

சுனாமியாய் வந்து போகும்...

மாமலையும் சிலநேரம்

எரிமலையாகும்!

0

சுட்டெரிக்கும் சூரியன்

வறுமைத் தந்து போகும்...

கொட்டித் தீர்க்கும் பெருமழை

எல்லைத் தாண்டிப் போகும்!

0

கொள்ளை நோய்கள் பலபல

ஆதிமுதல் வந்து போயின...

அத்தனையும் மக்களை

கொத்து கொத்தாய் கொண்டுப் போயின!

0

எங்கிருந்தோ வந்தது

கொரோனா என்பது

எத்தனையோ உயிர்களைப்

பலிவாங்கிப் போகுதே...!

0

என்னதான் வந்தாலும்

வானமும் பூமியும் மனிதமும்

நின்று நிலைக்கும்

மற்றவையெல்லாம் வந்து போகும்...!

கவிஞர் கமல.செல்வராஜ்

அருமனை. மின்னஞ்சல்: drkamalaru@gmail.com

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Poem Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment