'எனக்கு இன்னொரு முகம் இருக்கு': கோவை போலீஸ் கமிஷனர் எழுதிய நூல் வெளியீடு
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற நூலும், அவருடைய மனைவி ஷ்வேதா சுப்பையா பாலகிருஷ்ணன், மகன் அத்ரூத் சுப்பையா பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பேசினேட்டிங் பிளாக்ஸ் பார் பன்’ என்ற நூல் வெளியீட்டு விழா கோவை ப்ரூக்ஃபாண்டு ரோடு சாலையில் உள்ள ஐ.எம்.ஏ ஹாலில் நடைபெற்றது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற நூலும், அவருடைய மனைவி ஷ்வேதா சுப்பையா பாலகிருஷ்ணன், மகன் அத்ரூத் சுப்பையா பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து எழுதிய ‘பேசினேட்டிங் பிளாக்ஸ் பார் பன்’ என்ற நூல் வெளியீட்டு விழா கோவை ப்ரூக்ஃபாண்டு ரோடு சாலையில் உள்ள ஐ.எம்.ஏ ஹாலில் நடை பெற்றது
Advertisment
இதில் கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் கலந்து கொண்டு 2 நூல்களையும் வெளியிட்டார். முதல் நூலை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குனர் எம்.கிருஷ்ணன், 2-வது நூலை எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவன இயக்குனர் ஸ்ரீஷா மோகன்தாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் காவல்துறை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் பேசியதாவது.நான் காவல்துறையில் இருந்தாலும் புத்தகம் எழுத வேண்டும் என்ற அடிப்படை ஆர்வம் ஆரம்பத்திலேயே எனக்கு இருந்ததால்தான் என்னால் புத்தகம் எழுத முடிந்தது. நேரம் என்பது அனைவருக்குமே 24 மணி தான். அதில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதுதான் நம் நேரத்தில் முன்நிற்கிறது. நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை முடிவு செய்துவிட்டால் நேரம் தானாகவே கிடைத்துவிடும்.
புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருந்தால் அது கண்டிப்பாக நடக்கும். அதற்கான நேரமும் நமக்கு தானாகவே வந்து சேரும். நாம் என்ன நினைக்கிறோமோ, அதுவாக நினைத்து வாழும்போது அதுவாகவே நாம் மாறிவிடுவோம். நமக்குள் இருக்கும் கருத்துக்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வெளியிடுவார்கள்.
கவிதை, பாடல், கதை, கட்டுரை என எந்த விதத்திலும் அந்த கருத்துக்களை வெளிப்படுத்தலாம். அதுதான் மனிதனின் இயல்பு. நாம் எந்த வகையில் வெளிப்படுத்தினால் அது நன்றாக வருகிறதோ அந்த வகையில் கருத்துக்களை வெளியிடலாம். அது கண்டிப்பாக படைப்பாக முடியும். எனது படைப்புக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“