எழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடெமிசிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது அறிவித்துள்ளது.
எழுத்தாளர் மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதிய ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் வெளியானபோது கேரள இலக்கிய உலகில் பெரும் கவனம் பெற்றது. இந்த நாவல் தமிழில் சங்க இலங்கியங்களில் இடம்பெற்றுள்ள சங்ககால பாணர், பற்றியும் அவர்களின் வாழ்க்கையப் பற்றி விவரிப்பதாக அமைந்துள்ளது.
பூத்து மலர்ந்த நாள் நாவலை மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழிபெயர்த்து வம்சி புக்ஸ் பதிப்பகத்தில் வெளியானது. இந்த நாவலுக்கு சாகித்ய அகாடெமி 2019-ம் ஆண்டுக்கான தமிழில் மொழிபெயர்ப்பு படைப்புகள் பிரிவில் கே.வி.ஜெயஸ்ரீக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது அறிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீ 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளத்தில் இருந்து தமிழுக்கு நவீன இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இவர் மலையாளத்தில் இருந்து இரண்டாம் குடியேற்றம், பால் சக்கரியா கதைகள், ஒற்றைக் கதவு, உள்ளிட்ட நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீயின் மகள் சுகானாவும் மொழிபெயர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.வி.ஜெயஸ்ரீ-க்கு சாகித்ய அகாடெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.