யாழிசை கேட்கமாட்டேன்... நீ பேசுவாய் வாய் திறந்து..!

M Karunanidhi Health: வைரமுத்து அந்தக் கவிதையை வாசிக்க, வாசிக்க கருணாநிதி வெளிப்படுத்தும் உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை!

M Karunanidhi Health: திமுக தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர், கவிஞர் வைரமுத்து. திமுக ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் கருணாநிதிக்கு நேரம் அமையும்போதெல்லாம் அவர் விரும்பி சந்திக்கிற நபர் வைரமுத்து! இருவரின் தமிழ் காதலும் அந்த நட்பை நாளுக்கு நாள் வலுவேற்றி வைத்திருக்கின்றன.

கருணாநிதி உடல் நலம் குன்றி பேச முடியாமல் போனபிறகுதான் அவர்களின் அளவளாவல் நின்று போனது. ஆனாலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டு வந்த கருணாநிதியை கடந்த மார்ச் மாதம் (2018) கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தபோது கவிதை ஒன்றை எழுதிக் கொண்டு வந்து வாசித்துக் காட்டினார்.


கருணாநிதியை பேச வலியுறுத்தி எழுதப்பட்ட அந்தக் கவிதை ஒரு காவியம்தான்! இப்போதைய சூழலுக்கும் பொருந்திப் போகிற அந்தக் கவிதையை இங்கு பார்க்கலாம்!

பிடர் கொண்ட சிங்கமே பேசு

இடர்கொண்ட தமிழ்நாட்டின்

இன்னல்கள் தீருதற்கும்

படர்கின்ற பழைமை வாதம்

பசையற்றுப் போவதற்கும்

சுடர் கொண்ட தமிழைக் கொண்டு

சூள் கொண்ட கருத்துரைக்கப்

பிடர் கொண்ட சிங்கமே

நீ பேசுவாய் வாய் திறந்து

யாதொன்றும் கேட்கமாட்டேன்

யாழிசை கேட்கமாட்டேன்

வேதங்கள் கேட்கமாட்டேன்

வேய்க்குழல் கேட்கமாட்டேன்

தீதொன்று தமிழுக் கென்றால்

தீக்கனல் போலெழும்பும்

கோதற்ற கலைஞரே

நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்

நீ பேசுவாய் வாய் திறந்து.

வைரமுத்து அந்தக் கவிதையை வாசிக்க, வாசிக்க கருணாநிதி வெளிப்படுத்தும் உணர்வுகள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close