திருக்குறளின் 42,194 எழுத்துகளையும் ஐஸ் குச்சியில் எழுதிய இளைஞர்

ஐஸ் குச்சியில் திருக்குறளை எழுதிய 31 வயதான லூகாஸ், திருக்குறளில் மிகக் குறைந்த எழுத்துகளைக் கொண்ட மிகச் சிறிய திருக்குறளையும் அதிக எழுத்துகளைக் கொண்ட பெரிய திருக்குறளையும் கண்டறிந்துள்ளார்.

man write thirukkural in popsicle sticks, ஐஸ் குச்சியில் திருக்குறள், லுகாஸ், திருக்குறள் எழுத்துகளை எண்ணிய இளைஞர், mannually counts letters of thirukkural, திருக்குறள், thirukkural, தமிழ் இலக்கியம், tamil literature

ஒசூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உலகப் பொதுமறையான திருக்குறளின் 1330 குறள்களையும் ஐஸ் குச்சியில் எழுதி கவனத்தை ஈர்த்துள்ளார்.

செம்மொழியான தமிழ் மொழியைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒசூரைச் சேர்ந்த லூகாஸ் என்ற இளைஞர் திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் ஐஸ் குச்சியில் எழுதியுள்ளார். லூகாஸ் ஐஸ் குச்சியில் 1330 திருக்குறளையும் எழுதியுள்ளார். லூகாஸ் திருக்குறளின் 1330 குறள்கலில் உள்ள எழுத்துகளைக் எண்ண் மொத்தம் 42,194 எழுத்துகள் என்று தெரிவித்துள்ளார்.

லூகாஸ் தான் ஐஸ் குச்சிகளில் திருக்குறளை எழுத தனது மனைவி வின்சி கிளாரா உதவியதாகக் கூறுகிறார். “திருக்குறளை இதுவரை மக்கள் பனை ஓலை போன்ற பொருட்களில் எழுதியுள்ளனர். அதனால், நான் வித்தியாசமாகவும் படைப்புத்திறனுடன் எழுத ஐஸ் குச்சியை தேர்வு செய்தேன். ஐஸ் குச்சியை தேர்வு செய்வதற்கான இன்னொரு காரணம் என்னவென்றால், ஒவ்வொரு குச்சியிலும் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிப்பிட முடியும். அதனால், திருக்குறளில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட எளிதாக இருக்கும். திருக்குறளில் எத்தனை எழுத்துகள் உள்ளன என்பது அறியப்படவில்லை அல்லது பதிவு செய்யப்படவில்லை. அதனால், ஐஸ் குச்சியில் திருக்குறளை எழுதி முடிப்பதற்கு 2 மாதங்கள் ஆனது” என்று லூகாஸ் கூறுகிறார்.

ஐஸ் குச்சியில் திருக்குறளை எழுதிய 31 வயதான லூகாஸ், திருக்குறளில் மிகக் குறைந்த எழுத்துகளைக் கொண்ட மிகச் சிறிய திருக்குறளையும் அதிக எழுத்துகளைக் கொண்ட பெரிய திருக்குறளையும் கண்டறிந்துள்ளார்.

லூகாஸ், 1330 குறள்களில் 833வது மற்றும் 1,304வது குறளும் 23 எழுத்துகளுடன் மிகக் குறைந்த எழுத்துகளைக் கொண்ட குறள்களாகவும் 957வது குறளும் 1246வது குறளும் 39 எழுத்துகளுடன் அதிக எழுத்துகளைக் கொண்ட பெரிய குறள்கள் என்று லூகாஸ் பெருமிதத்துடன் கூறுகிறார்.

பெங்களூருவில் பணிபுரியும் லூகாஸ், 2018-ல் இலக்கியத்தில் தலைசிறந்த படைப்பு திருக்குறள் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். அதோடு, திருவள்ளுவர் படம் பொறித்த 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்களை சேகரித்து வைத்துள்ளதாக கூறுகிறார். மேலும், திருவள்ளுவர் மற்றும் திருக்குறல் பற்றிய விழிப்புணர்வை சினிமா பார்வையாளர்களிடமும், தமிழ் தெரியாதவர்களிடம் பரப்புவதற்காக திருக்குறள் குறிப்புடன் தமிழ் திரைப்படங்களிலிருந்து எடுக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட குறும்படங்களை லூகாஸ் சேகரித்து வைத்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில், மொரீஷியஸை தளமாகக் கொண்ட சர்வதேச புலம்பெயர்ந்தோர் தமிழ் சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மெய்நிகர் நிகழ்வுக்காக சர்வதேச திருக்குறள் அறக்கட்டளை மொரீஷியஸிடமிருந்து அவருக்கு அழைப்பு வந்தது. “இந்த ஆன்லைண்ட் நிகழ்ச்சியில் 7 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திருக்குறளையும் அதன் அர்த்தத்தையும் வீடியோ அல்லது ஆடியோ வடிவத்தில் சமர்ப்பிக்க முடியும். நான் ஏழு மாணவர்களுக்கு குறள்களைக் கற்பித்தேன். அவர்கள் திருக்குறளைக் கற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள்.” என்று லூகாஸ் பூரிப்புடன் கூறுகிறார்.

திருவருவுவர் ஆர்வலரான லூகாஸ், திருக்குரலை குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக அரசாங்கம் ஒரு அகாடமியை அமைக்க வேண்டும் என்று விரும்பினார்.

இப்படி திருக்குறள் மீதும் திருவள்ளுவர் மீதும் ஆர்வமாக இருக்கும் லூகாஸ், திருக்குறளை குழந்தைகளுக்கு கற்பிப்பதற்காக அரசாங்கம் ஒரு அகாடமியை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Man write thirukkural in popsicle sticks mannually counts letters of thirukkural

Next Story
வீடு புத்தகங்களை அனுமதிப்பதில்லை? எழுத்தாளர்கள் எஸ்.ரா – அழகிய பெரியவன் மாறுபட்ட கருத்துwriter s ramakrishnan, writer azhagiya periyavan, எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், எழுத்தாளர் அழகிய பெரியவன், வீடு புத்தகங்களை அனுமதிப்பதில்லை, homes not allowed books or allowed, tamil literature, tamil debates, tamil readers, தமிழ் வாசகர்கள், தமிழ் இலக்கியம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com