‘சாதி எதிர்ப்பு அறிவியக்கத்திற்கு பலம் சேர்த்தவர்’; எழுத்தாளர் வ.கீதாவுக்கு அறிஞர் ராஜ் கௌதமன் விருது அறிவிப்பு

தமிழ் அறிவுப் புலத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம் சார்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து ஆய்வுகளை எழுதி வரும் எழுத்தாளர் வ.கீதாவுக்கு மறைந்த அறிஞர் ராஜ் கெளதமன் பெயரிலான ஆய்வு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
V Geetha 2

அறிஞர் ராஜ் கௌதமன் மறைவைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பதிப்பகமும், அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளையும் இணைந்து, அறிஞர் ராஜ் கௌதமன் விருது அறிவித்துள்ளனர். Photograph: (Image Source: Instagram/ tara_books)

தமிழ் நவீன இலக்கியத்திலும் தமிழ் அறிவுப் புலத்திலும் திறனாய்வு, புனைவு, தன்வரலாறு, மொழி பெயர்ப்பு, தலித்தியம், மார்க்சியம், பெண்ணியம் உள்ளிட்ட தளங்களில் இயங்கியவர் அறிஞர் ராஜ் கௌதமன், இவர் கடந்த 2024, நவம்பர் 13-ம் தேதி மறைந்தார். பாட்டும் தொகையும், அறம் அதிகாரம், தலித் பண்பாடு என பல மிக முக்கியமான ஆய்வுகளை செய்துள்ள ராஜ் கௌதமன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

Advertisment

அறிஞர் ராஜ் கௌதமன் மறைவைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பதிப்பகமும், அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளையும் இணைந்து, அறிஞர் ராஜ் கௌதமன் விருது அறிவித்துள்ளனர். 

தமிழ் அறிவுப் புலத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம் சார்ந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து ஆய்வுகளை எழுதி வரும் எழுத்தாளர் வ.கீதாவுக்கு மறைந்த அறிஞர் ராஜ் கெளதமன் பெயரிலான ஆய்வு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையமும் அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளையும் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தலித்தியம், மார்க்சியம், பெண்ணியம் என்னும் இணைப்பில் சாதி எதிர்ப்புச் சொல்லாடலைக் கட்டியெழுப்பியதில் ஈடுபட்டிருந்தவர் அறிஞர் ராஜ் கௌதமன். அவரின் மறைவையொட்டி அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளையை அவருடைய குடும்பத்தாரும் நீலம் பண்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

மக்களுக்காக எழுதுபவர்களை இனங்காண்பது மட்டுமன்று அவருக்கு அணுக்கமான ஆய்வுகளையும் ஆய்வாளர்களையும்  அங்கீகரிக்கவும், பரவலாக்கவும் அவர் பெயரால் விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தலித்தியம், பண்பாடு மற்றும் கோட்பாட்டு ஆய்வுகள், மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்கள் வரலாறு, நவீன ஆய்வுகள் உள்ளிட்ட களங்களில் பங்களித்தவர்களுக்கு இங்கு விருது வழங்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் ராஜ் கௌதமன் அவர்களோடு தனிப்பட்ட முறையிலும் ஆய்வு சார்ந்தும் தோழமை கொண்டிருந்த வ. கீதா அவர்களுக்கு, சாதி எதிர்ப்பு வரலாறு சார்ந்து நீண்ட காலமாக மேற்கொண்டு வரும் பங்களிப்புகளைப் பாராட்டி அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருதை வழங்க இருக்கிறது. இந்நிகழ்வில் அவருடைய சமூக ஆய்வுப் பங்களிப்பை மதிப்பீடு செய்யும் விதமாக கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட உள்ளது. மேலும், ஒரு இலட்ச ரூபாய் பணமுடிப்பு வ.கீதா அவர்களுக்கு வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Literature

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: