/indian-express-tamil/media/media_files/2025/09/18/painting-2-2025-09-18-08-33-33.jpg)
இந்த ஓவியக் கண்காட்சியில் ஓவிய கலைஞர் ரமேஷ் வர்மா வரைந்த 60-க்கும் மேற்பட்ட நுட்பமான ஓவியங்கள் இடம் பெற்று இருந்தது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் தேசிய அளவிலான ஓவிய கலை கண்காட்சி நடைபெற்றது.
இந்த ஓவியக் கண்காட்சியில் ஓவிய கலைஞர் ரமேஷ் வர்மா வரைந்த 60-க்கும் மேற்பட்ட நுட்பமான ஓவியங்கள் இடம் பெற்று இருந்தது.
இந்த கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியத்துறை சார்ந்த மாணவர்கள் பார்த்து ஓவியத்தின் நுணுக்கம் மற்றும் அதன் அர்த்தங்களை கேட்டு அறிந்தனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/09/18/ramesh-varma-2025-09-18-08-35-54.jpeg)
இதில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பு குறித்த ஓவியம், நிலாவில் பாட்டி வடை சுடுவதும் அதை குழந்தையுடன் தாய்மார்கள் பார்த்து உணவு ஊட்டுவதும் போன்ற ஓவியம், போரால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது குறித்த ஓவியம், போரால் உலகின் சமாதானம் கேள்விக்குறியாகியதையும் அமெரிக்கா சுதந்திர தேவி சிலை போரால் தகர்க்கப்படுவது போன்ற ஓவியங்களும் இதில் இடம் பெற்றிருந்தது.
இந்த ஓவியங்களில் மனிதனின் வளர்ச்சி, சிந்தனை, ஏமாற்றம், வாழ்வாதாரம், அன்பு என அனைத்து உணர்வுகளும் ஓவியங்களாக காட்சி அளித்தது.
‘போரால் சீர்குலையும் உலகின் சமாதானம்’: கோவையில் ரமேஷ் வர்மாவின் ஓவியக் கண்காட்சி#coimbatorenewspic.twitter.com/CGm5mZEbyx
— Indian Express Tamil (@IeTamil) September 18, 2025
தற்போது நடைபெற்று வரும் கண்காட்சியில் உள்ள ஓவியங்களில் ஒவ்வொன்றும் வரைய 3 முதல் 4 மாதம் ஆகும் எனவும், இந்த ஓவியங்களை வரையும் போதே அதனுடன் பேசுவது போன்ற உணர்வுகள் ஏற்படும் என்றும் அதுவே கலைநயமாகிறது என ஓவியர் ரமேஷ் வர்மா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us