/indian-express-tamil/media/media_files/2025/09/07/manushyaputhran-2025-09-07-20-04-42.jpg)
கவிஞர் மனுஷ்யபுத்திரன் Photograph: (facebook/ manushya.puthiran)
மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா செப்டம்பர் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்நாள் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பதிவிட்டிருப்பதாவது: “மேடைப் பேச்சின் அலங்கார மொழிகளால்தான் பொதுப் பார்வையாளர்களைக் கொண்ட ஒரு அரங்கை தன்வயப்படுத்த முடியுமா?
அப்படி ஒன்றும் இல்லை என்பதை நேற்று மதுரை புத்தகத் திருவிழாவில் 'எதைப் படித்தீர்கள்? எதை மறந்தீர்கள்? என்ற தலைப்பிலான என் உரையில் நிரூபித்துக் காட்டினேன். புத்தகங்களின் வழியே குழந்தைகளின் இதயத்தில் எப்படி முதலீடு செய்வது என்பதைப் பற்றி பேசிவிட்டு நகுலனின் கதை ஒன்றையும் என் நெடுங்கவிதை ஒன்றையும் கூறி அதற்கு விரிவாக பொருள் உரைத்தேன். பார்வையாளர்கள் மிகுந்தஈடுபாட்டையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினர்.
இரண்டு நவீன இலக்கியப் பிரதிகளின் வழியே பார்வையாளர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் செய்ய முடியும் என்பதற்கு நேற்றைய உரை சாட்சியமாக இருந்தது என்பதை நான் மேடையில் இருந்து இறங்கியதும் பலரும் குறிப்பிட்டனர்.
தொழில்முறை மேடைப் பேச்சாளர்கள் பேசினால் தான் மக்கள் கேட்பார்கள் என்பது ஒரு கட்டுக்கதை.
பேசுகிறவனுக்கு ஒரு சபையை ஆட்கொள்வதை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?” என்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.