வள்ளுவர் மறை வைரமுத்து உரை: ‘ஆகா! சீனக் கிளி குயில்மொழியில் கூவியிருக்கிறது’ - கவிஞர் வைரமுத்து பெருமிதம்

கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதிய ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலை சீனப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள சீனப் பெண் பாராட்டி பேசிய வீடியோவை வெளியிட்டு கவிஞர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதிய ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலை சீனப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள சீனப் பெண் பாராட்டி பேசிய வீடியோவை வெளியிட்டு கவிஞர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vairamuthu niraimathi 2

கவிஞர், திரைபடப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதிய ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். Photograph: (x/Vairamuthu)

கவிஞர், திரைபடப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதிய ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார். இந்த நூல் குறித்து கவிஞர் வைரமுத்து இலக்கிய நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பேசி வருகிறார்.

Advertisment

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவின் ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலைப் படித்த சீனாவில் உள்ள யுனான் மின்சூ பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரும் சீனப் பெண்மணியுமான கிகி ஜாங் பாராட்டிப் பேசியதுடன், இந்நூலைத் தமது மாணவர்கள் அனைவருக்கும் பரிந்துரைத்து, திருக்குறளின் நிலையான பேரறிவை பகிர்ந்து வளர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவில் உள்ள யுனான் மின்சூ பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள கிகி ஹாங், சீனாவை சேர்ந்த பெண், சீனமொழி இவருடைய தாய்மொழி. தமிழை முறைப்படி படித்து பட்டம் பெற்ற கிகி ஹாங், தன்னுடைய பெயரை ‘நிறைமதி’ என தமிழ்ப்பெயரைச் சூட்டிக்கொண்டார்.

இவர் கவிஞர் வைரமுத்துவின் ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ நூலைப் படித்துவிட்டு, பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” அனுப்பி வைத்தேன் ஆகா படித்துவிட்டு அந்தச் சீனக் கிளி குயில்மொழியில் கூவியிருக்கிறது” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அவர் ஒரு சீனப் பெண்

இயற்பெயர் கிகி ஜாங்;
தமிழ் படித்துச்
சூடிக்கொண்ட பெயர் நிறைமதி;
வகிக்கும் தொழில்
யுனான் மின்சூ
பல்கலைக்கழகத்தில்
தமிழ்த்துறைத் தலைவர்

”வள்ளுவர் மறை 
வைரமுத்து உரை”
அனுப்பி வைத்தேன்

ஆகா!
படித்துவிட்டு
அந்தச் சீனக் கிளி
குயில்மொழியில்
கூவியிருக்கிறது

கேட்கக் கேட்க
இருதயமே
இனிப்பின் உறுப்பாய்
மாறிவிடுகிறது

நீங்களும் கேளுங்களேன்;
கேட்டுச் சொல்லுங்களேன்” என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.


அந்த வீடியோவில், நிறைமதி என்கிற கிகி ஜாங் பேசியிருப்பதாவது: “வணக்கம், சீனாவிலிருந்து நிறைமதி பேசுகிறேன், கவிப்பேரரசு வைரமுத்து தமது ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்னும் புதிய நூலை எனக்கு அன்பளிப்பாக கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. இந்தநூல் கடல், மலைகளை கடந்து என் கைகளுக்கு வந்தது. இது நட்பின் அழைப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் சுவையையும் ஏந்தியுள்ளது.

திருக்குறள், தமிழர்களின் ‘அமுத’ நூலாகும். உலகளவில் ‘ஞான’த்தின் செல்வமும் ஆகும். அந்த பாரம்பரியத்தை தொடர்ந்து கவிப்பேரரசு வைரமுத்து இயற்றிய ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற இந்த நூல் ஒரு கலாச்சாரத்தின் தலைவராக தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டும் சீரிய முயற்சியாகும். இந்நூல் திருக்குறளின் ஆழ்ந்த கருத்துகளை தெளிவாகவும், இன்றைய சூழலுக்கு ஏற்பவும் எளிய நடையிலும் விளக்குகிறது. தங்கள் கையொப்பமிட்ட இந்த நூலை எனக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி.

இந்த சிறப்பான நூலை எம் மாணவர்கள் அனைவருக்கும் பரிந்துரைத்து, திருக்குறளின் நிலையான பேரறிவை பகிர்ந்து வளர்ப்பேன். தங்களின் இந்தநூல் தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தை காத்து வளர்க்கும் ஓர் ஒளி விளக்காக விளங்கும். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்பது எனக்கு பிடித்த திருக்குறள் ஆகும்.

அதாவது, கற்பவற்றை ஒருவன் குற்றமறக் கற்கவேண்டும். கற்கவேண்டிய உயர்பொருளைக் கற்றபின் அக்கல்வி காட்டும் நன்னெறியிலே நிற்கவேண்டும் என்பதை இந்த நூல் இப்படி விளக்குகிறது. இப்படியாக இந்த நூலை படித்துவிட்டு இது காட்டிய நன்னெறியிலே நிற்க வேண்டும்.” என்று நிறைமதி கூறியுள்ளார்.

சீனாவின் யுனான் மின்சூ பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் நிறைமதி பேசிய இந்த வீடியோவை கவிஞர் வைரமுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Vairamuthu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: