Advertisment

புதுப் பொங்கல் சபதம்!

பொங்கல், தமிழர்களின் தனிப் பெரும் பண்டிகை! உழவர்களின் திருவிழா... உழைப்பின் திருவிழா இது! பொங்கல் விழா மேன்மையை சொல்லும் கவிதை இது!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pongal 2018, Pongal poem, Kamala.selvaraj

Pongal 2018, Pongal poem, Kamala.selvaraj

கவிஞர் கமல.செல்வராஜ்

Advertisment

O

இப் புண்ணியப் பூமியில்

நித்தம் புலர்ந்தெழும்

செங்கதிரோனுக்கு

புத்தம் புது மண்பானையில்

வெண்பொங்கல்!

நெற்கதிரும் நற்கரும்பும்

மஞ்சளுடன் நவதானியமும்

ஐம்பூதங்களின் பரிசளிப்பு!

O

வீட்டிற்கு வெள்ளை

முற்றத்தில் மாக்கோலம்

வீதியில் தோரணம்

மாட்டுக்கு மரியாதை

புத்தாடையுடன் புன்சிரிப்பும்

பொங்கும் பொங்கலுக்கு

அடையாளம்!

O

மண்ணைப் பொன்னாக்கும்

உழவனுக்கு மரியாதை

வீறுகொண்டுத்

துள்ளிக் குதித்தோடும்

காளையை அடக்கிடும்

வீரருக்கும் மரியாதை

புல்லுக்கும் பூண்டிற்கும்

மரியாதை

இது

தை பிறந்ததால்

வந்த மரியாதை!

O

குடிசையும் மாடியும்

மகிழ்ந்து கொண்டாடும்

சமத்துவப் பொங்கல்

இதுவே

தமிழினத்தின்

தனித்துவப் பொங்கல்!

O

இனி

போகியோடு “ஒக்கிக்கும்”

விடை கொடுப்போம்

ஒருபோதும் இயற்கைக்கு

இடையூறு செய்யோமென

புதுப் பொங்கல் சபதமேற்போம்…!

(கவிஞர் கமல.செல்வராஜ், கல்வியியல் கல்லூரியின் முதல்வர். ஆய்வுப் பட்டம் பெற்ற முனைவர்! கன்னியாகுமரி மாவட்டம், அருமனையை சேர்ந்தவர். பேச: 9443559841. அணுக: drkamalaru@gmail.com)

 

Pongal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment