பொங்கல் சாட்சியாக ஒரு சபதம்

கவிஞர் கமல.செல்வராஜ்

 

வானம் பொழிந்து

பூமி செழித்திட வேண்டும்

கரும்பும் மஞ்சளும் கூடவே

விளைந்திட வேண்டும்

உழவனும் குயவனும்

மகிழ்ந்திட வேண்டும்!

O

இல்லம் ஒளிர

வெள்ளை வேண்டும்

வாழைத் தோரணம்

தெருவில் வேண்டும்

குலவை சத்தம்

எங்கும் வேண்டும்!

O

செடியும் கொடியும்

வளர்ந்திட வேண்டும்

ஆடும் மாடும்

பெருகிட வேண்டும்

அன்பும் அறனும்

ஓங்கிட வேண்டும்!

O

அரும் தமிழ் மொழியைக்

பேசிட வேண்டும்

கைத்தறி ஆடையை

அணிந்திட வேண்டும்

நலிந்திடும் நெசவைக்

காத்திடல் வேண்டும்!

O

தைத் திருநாளில்

சபதம் ஏற்போம்

பொங்கிடும் பொங்கலை

சாட்சியாய் வைப்போம்

மண்ணில் மக்கா நெகிழியை (பிளாஸ்டிக்)

இவ்வையம் விட்டே துரத்துவோமென…!

தையே வருக! தைரியம் தருக!!

(கவிஞர் கமல.செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். இவரது கவிதை, கட்டுரை நூல்கள் பரவலாக கவனம் ஈர்த்தவை)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Literature news in Tamil.

×Close
×Close