மாதம் மும்மாரி
இயற்கை இடுபொருளில்
இருபோக விளைச்சல்
உழவனுக்கு மகிழ்வு!
வற்றா நீர்நிலை
செழிப்பாய் வயல்வெளி
மஞ்சளும் கரும்பும்
விவசாயிக்கு விருந்து!
செங்கல் அடுப்பில்
மரபுமாறா மண்பானை
அழகழகாய் அகல்விளக்கு
குயவனுக்குக் கொண்டாட்டம்!
முக்கனி முல்லைபூ
வெற்றிலை பாக்கு
தலைவாழை இலையில்
புத்தரிசிப் படையல்!
ஜல்லிக்கட்டுக் காளை
மல்லுகட்டுக் வீரன்
சண்டைக் கோழி
வீரத்தின் அடையாளம்
நாளும் கோளும் மாறும்
கதிரோன் தனுமாறி
மகரப்பிவேசம் தையின் புலர்ச்சி
செழிப்பும் களிப்பும்!
உலகத் தமிழர்
ஒத்து முழங்கும்
ஒரே குரல்
பொங்கலோ… பொங்கல்…!
போக்கிப் பொங்கல்</p>
தைப் பொங்கல்
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
கவிதை: கவிஞர் கமல. செல்வராஜ்.அருமனை, அழைக்க: 9443559841