Advertisment

'பாறையைத் தின்று பசியாறியவன் போய்விட்டான்' கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு

மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் உள்ளிட்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'பாறையைத் தின்று பசியாறியவன் போய்விட்டான்' கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு

கவிஞரும், எழுத்தாளரும், திரைப்பட பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.

மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் உள்ளிட்ட படைப்புகளுக்கு சொந்தக்காரர்.

திரைத்துறையில் வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

விருதுகள்

இவர் எழுதிய கன்னி எனும் புதினத்திற்கு 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் என்ற விருதைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார். சம்மனசுக்காடு கவிதைத் தொகுப்புக்காக சுஜாதா விருதும் பெற்றார்.

கொலை வழக்கில் திருப்பம்

பிரான்சிஸ் கிருபா, 2019 ஆம் ஆண்டு, கோயம்பேட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு முதலுதவி செய்து காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால், அந்த இளைஞர் உயிரிழந்ததாலும், பிரான்சிஸ் கிருபா நீண்ட முடியுடன் மாறுபட்ட தோற்றத்தில் இருந்ததாலும் காவல் துறையினர் அவரை சந்தேகித்து கைது செய்தனர்.

பின்னர், பிரேத பரிசோதனையின் அடிப்படையில் உயிரிழந்த வடமாநில இளைஞர் வலிப்பு ஏற்பட்டும், அதனால் மாரடைப்பு ஏற்பட்டதாலே உயிரிழந்ததாகவுமே கண்டறியப்பட்டது. அதன்பின்னரே பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

உடல் நிலை குறைவு காரணமாக சென்னையில் உயிரிழந்த பிரான்சிஸ் கிருபாவின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் ,பத்திரிகையாளர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆவண நிகழ்படக் கலைஞர் லீனா மணிமேகலை, 'பாறையைத் தின்று பசியாறியவன் போய்விட்டான்' என வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதே போல, திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான பழனிபாரதி பிரான்ஸ் கிருபா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.


அவர், "சக்தியின் கூத்தில்
ஒளியின் தாளம்
ஓய்ந்துவிட்டது…
வாழ்வை
மரணமாக
மரணத்தை
வாழ்வாக
உயிர்த்தெழும் சொற்களுக்காகவே
வாழ்ந்த பெருங்கவிஞன்
பிரான்சிஸ் கிருபாவுக்கு
ஆழ்ந்த அஞ்சலி…." என குறிப்பிட்டுள்ளார்.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment