Advertisment

சென்னையின் வரலாற்றுக்கு இவரது எழுத்துகளே சான்று! எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்!

எஸ் முத்தையா காலமானார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
S Muthiah Chronicler of Madras dies

S Muthiah Chronicler of Madras dies

பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 89. சென்னை மாநகரத்தைப் பற்றிய அரசியல், பண்பாட்டு வரலாறு தொடர்பாக பல புத்தகங்களை எழுதி புகழ் பெற்றவர் இவர்.

Advertisment

சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டில் பிறந்த முத்தையா, இலங்கையில் தனது பள்ளிப்படிப்பை துவக்கினார். இந்தியா மற்றும் அமெரிக்காவிலும் படித்திருக்கிறார். பொறியியலில் பி.எஸ்.சி முடித்த பிறகு, வெளியுறவுத்துறையில் எம்.ஏ. பட்டம் வென்றார். டைம்ஸ் ஆஃப் சிலோனில் பத்திரிக்கையாளராக பணியை துவக்கிய முத்தையா 1951 முதல் 1968 வரை அதில் பணியாற்றினார். சண்டே டைம்ஸ் மற்றும் இதழ்களிலும் பணியாற்றி இருக்கிறார். 'ஞாயிறு' இதழின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்.

சென்னையின் மறுகண்டுபிடிப்பு,  சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார். 'மெட்ராஸ் டிஸ்கவர்டு' என்ற இவரது புத்தகம் 1981ல் வெளியானது. அதன் பிறகு புதுப்பிக்கப்பட்ட ‘மெட்ராஸ் ரீ டிஸ்க்வர்டு’ என்ற நூல் வெளியானது. இப்போது வரை சென்னையைப் பற்றிய விவரங்களை திரட்ட வேண்டுமெனில், எஸ்.முத்தையா எழுதிய நூல்களைத் தான் பலரும் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னையில் வசித்துவந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment