Advertisment

’வன்முறைக்கு கலை மூலம் பதிலளிக்க ஒரு வழி’- சல்மான் ருஷ்டியின் கத்தி தாக்குதல் பற்றிய நினைவுக் குறிப்பு

'Knife: Meditations After an Attempted Murder' ஏப்ரல் 16 அன்று வெளிவருகிறது

author-image
WebDesk
New Update
Knife

Knife: Meditations After an Attempted Murder

பிரிட்டிஷ் நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் பல புத்தகங்கள் இலக்கிய உலகில் பிரபலமானவை. அவரது இரண்டாவது நாவலான 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' 1981ஆம் ஆண்டில் புக்கர் பரிசை வென்றது.

Advertisment

இந்த நாவல் இந்தியாவைப் பற்றி பேசியது. 1983இல் வெளியான அடுத்த நாவலான 'ஷேம்' பாகிஸ்தானைப் பற்றியது.

ஆனால் 1988-ஆம் ஆண்டு வெளியான அவரது நான்காவது நாவலான The Satanic Verses மிகவும் சர்ச்சைக்குள்ளானது. கதையில் பாலியல் தொழில் செய்யும் இரு பெண்களுக்கு முகமது நபியின் மனைவிகளின் பெயர்கள் கொடுக்கப்பட்ட.தால் சில முஸ்லிம்கள் இந்த நாவல் இஸ்லாத்தை அவமதிப்பதாகக் கருதினர்.

சல்மான் ருஷ்டியை கொல்லுமாறு இரானின் உச்சபட்ச மதத் தலைவராக இருந்த அயதுல்லா ருஹோல்லா கோமேனி, ஃபத்வா என்படும் மதக்கட்டளையை 1989ஆம் ஆண்டு பிறப்பித்தார். அதன் பிறகு, உலகம் முழுவதிலும் இருந்து வந்த வன்முறை அச்சுறுத்தல்களின் கீழ், ருஷ்டி ஆறு ஆண்டுகள் தலைமறைவாகவே வாழ நேரிட்டது. பிரிட்டிஷ் அரசு அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தது.

The Satanic Verses புத்தகத்துக்குப் பிறகும் பல புத்தகங்களை ருஷ்டி எழுதியுள்ளார். ஹாரூன் அண்ட் தி சீ ஆஃப் ஸ்டோரிஸ் (1990), இமேஜினரி ஹோம்லேண்ட்ஸ் (1991), தி மூர்ஸ் லாஸ்ட் சை (1995), தி கிரவுண்ட் உள்ளிட்டவை அடங்கும்.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம், ஷடாக்குவாவில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கு ஒன்றில் சல்மான் ருஷ்டி, பங்கேற்றபோது, மேடையில் ஹாடி மாடா் (24) என்பவா் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினார்.

இந்த தாக்குதலில் சல்மான் ருஷ்டி, ஒரு கண் பார்வையை முழுவதும் இழந்தார், ஒரு கை செயலிழந்தது.

ந்த நிலையில், சல்மான் ருஷ்டி இந்த தாக்குதல் குறித்த நினைவுக் குறிப்பை ஒரு புத்தகமாக வெளியிட உள்ளார்.

இது நான் எழுதுவதற்கு அவசியமான புத்தகம், என்ன நடந்தது என்பதை பொறுப்பேற்கவும், வன்முறைக்கு கலை மூலம் பதிலளிக்கவும் ஒரு வழிஎன்று ருஷ்டி ஒரு அறிக்கையில் பகிர்ந்து கொண்டார்.

Knife: Meditations After an Attempted Murder, அவரது சமீபத்திய மற்றும் 15வது நாவலில், ஆகஸ்ட் 12, 2022 அன்று நடந்த மறக்க முடியாத அதிர்ச்சிகரமான சம்பவங்களைப் பற்றி முதல் முறையாக சல்மான் ருஷ்டி பேசுகிறார். 

Knife ஒரு கொடுமை நிறைந்த புத்தகம். அதை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம், மேலும் சல்மான் தனது கதையைச் சொல்வதில் உள்ள உறுதியையும், அவர் விரும்பும் பணிக்குத் திரும்புவதையும் கண்டு வியப்படைகிறோம், என்று பென்குயின் ரேண்டம் ஹவுஸ் தலைமை நிர்வாக அதிகாரி நிஹார் மாளவியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read in English: Salman Rushdie announces memoir on knife attack

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment