தமிழ் மொழியை கொண்டாடும் மாதம் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி சிங்கப்பூரில் தொடங்க உள்ளது. ஒரு மாதம் முழுவதும் தமிழ் மாதமாக கொண்டாப்படும்.
தமிழ் மொழியை போற்றும் வகையில் ஏப்ரல் 1-ம் தேதி தமிழ் மாதம் சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறது. இந்த முறை ’அழகு’ என்ற தலைப்புதான் விழாவின் பேசு பொருளாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி கவுன்சில் இந்த கொண்டாட்டத்தை நடத்துகிறது. இந்த விழாவில் 42 நிகழ்ச்சிகள் நடைபெறும் கிட்டதட்ட 43 பேர் சேர்ந்து இதை நடத்துகிறார்கள். மைய்ய தலைப்பில் இலக்கிய படைப்புகள், பேச்சு போட்டு, ஓவியம் ஆகியவை வரவேற்கப்படுகிறது. இதில் 67% இளைஞர்கள் மட்டுமே பங்குபெறுவார்கள்.
ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் பயிற்சி மற்றும் செய்தி வடிவத்தில் எழுதுவது தொடர்பாக தமிழ் முரசு பத்திரிக்கை மாணவர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளது.
தமிழ் மொழி கவுன்சிலின் தலைவர் மனோகரன் சுப்பையா கூறுகையில், ‘ தமிழ் என்பது எங்கள் உணர்வோடு கலந்துள்ளது. ஆங்கிலத்தால் எப்போதும் அதை ஈடு செய்ய முடியாது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பார்களுக்கு மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எங்களுக்கு முன்பு இருக்கும் சவால்கள் பற்றி எங்களுக்கு தெரியும். எங்களால் முடிந்த பணிகளை தமிழ் வளர்க்க செய்கிறோம்’ என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், மாண்டரின், மலாய் ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளது.