சாதனை படைத்த க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி!

ஆனாலும் அந்த சிகிச்சைக்கு மத்தியிலும் நேற்று (நவம்பர் 13) மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

Successfully published 3rd edition of kriya's tamil dictionary

Successfully published 3rd edition of kriya’s tamil dictionary : க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி இப்போது விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியின் முதல் பதிப்பு 1992-ம் ஆண்டு வெளியானது. 16 வருடங்களுக்கு பிறகு கழித்து, மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2008-ம் ஆண்டில் வெளியானது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, இடைப்பட்ட பொழுதில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கிய மூன்றாவது பதிப்பு பல்வேறு கடின முயற்சிக்கு பிறகு வெளியாகியுள்ளது.

ஆசிரியரான எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படி அகராதி ஒன்றை விரிவாக்கித் திருத்திக் கொண்டு வருவது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த அகராதி ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாகியுள்ளது. இதில் 23,800 தலைச்சொற்கள், 40,130 வாக்கியங்கள், 2,632 இலங்கை பேசு தமிழ் வழக்கு, திருநர் வழக்குச் சொற்களும், தொடர்புச் சொற்களும் இடம் பெற்றுள்ளது.

76 வயதாகும் எஸ்.ராமகிருஷ்ணன் கடுமையாக பணியாற்றி இந்த அகராதியை உருவாக்கினார். ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் அந்த சிகிச்சைக்கு மத்தியிலும் நேற்று (நவம்பர் 13) மூன்றாவது பதிப்பு வெளியிடப்பட்டது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Successfully published 3rd edition of kriyas tamil dictionary

Next Story
புதுமைப்பித்தன் நூல் சர்ச்சை; சாரு நிவேதிதா, ஜெ.மோ சொன்னது சரியா?Pudhumaipithan, Pudhumaipithan short stories collections, Pudhumaipithan short stories collections classical edition, ar venkatachalapathy, புதுமைப்பித்தன், புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு பதிப்பு, ஆ.இரா.வேங்கடாசலபதி, ஜெயமோகன், சாரு நிவேதிதா, சர்ச்சை, jeyamohan, charu nivedita, tamil literature, tamil literature controversy, tamil writer Pudhumaipithan, காலச்சுவடு பதிப்பகம், kalachuvadu publicatons
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com