சுஜதாவின் நகரம் என்றும் சிறுகதை 1973 ம் ஆண்டுகளில் மதுரையை மையமாக கொண்டு எழுதப்பட்டது. மதுரை எப்படி இருக்கிறது என்பதை இந்த கதையில் அவர் அறிமுகம் செய்துள்ளார். மேலும் மதுரை மீனாட்சி அம்மனின் கோவில் கோபுரங்களை பற்றி அழகாக அவர் விவரித்துள்ளார். அறிவியலை தனது இலக்கிய நடையோடு சேர்த்து எழுதுவதில் சுஜாதா வல்லவர்.
குறிப்பாக இந்த நகரம் என்றும் சிறுகதை வள்ளியம்மாள் என்ற ஒரு அப்பாவிப் பெண், தனது நோய்வாய்பட்ட குழந்தையை பெரிய ஆஸ்பத்திரி அதாவது அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்வார். அங்கே நடக்கும் காட்சிகளை மிகவும் எதார்த்தமாக சுஜாதாவின் கதையில் அவர் கூறியிருப்பார். படித்தவர்களே அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது, எங்கே எந்த சிகிச்சை பிரிவு இருக்கிறது என்று திணறிவிடுவார்கள். வள்ளியம்மாள் போன்று கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு அரசு மருத்துவமனை உண்மையில் எப்படி காட்சியளிக்கிறது.
பொதுமக்களை எப்படி நடத்துகிறார்கள். மருத்துவம் சாமனிய மக்களுக்கும் கிடைக்கின்றதா? . இப்படி பல கேள்விகளை நம்மில் இந்த கதை எழுப்பும். தனியார் மருத்துமனைகளைவிட அரசு மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை வழங்கினாலும், அங்கே மக்களுக்கு கிடைக்கும் அனுபவங்கள் வலி நிறைந்ததாகவும் கனமாகவும் இருக்கிறது என்பதை இந்த கதை எடுத்துசொல்கிறது.
எல்லா காலகட்டத்திற்கும் பொருத்தி பார்க்கும்படியான கதையை சுஜாதா எழுதியிருக்கிறார். இது போன்று உங்களுக்கும் ஏற்பட்டிருந்தாலும். இந்த கதையை படிக்கும்போது உங்களை நினைவுகளை நீங்கள் அசைபோட முடியும்.