கோவையில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் தமிழ்நாடு சிறைத்துறை சார்பில் கூண்டுக்குள் வானம் என்ற தலைப்பில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisment
இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருப்பதற்கான நோக்கம் என்பது, தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கான நூலகங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கிருக்கக்கூடிய பழைய புத்தகங்களாக இருக்கின்ற காரணத்தால், அந்தப் புத்தகங்களைத் திரும்ப திரும்ப எடுத்து படிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதேபோல் புத்தகங்களும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளன.
மேலும் இந்த இரண்டு குறைகளைக் களைய வேண்டும் என்பதற்காகவே, இந்தப் புத்தகக் காட்சியில் எங்களுக்கு அரங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்ததற்கு, பொதுமக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலம் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது என சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரங்கு குறித்த செய்தியும் பெரிய அளவில் பரவியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் புத்தக பதிப்பாளர்கள் அரங்க உரிமையாளர்கள் என அனைவருமே ஆவலாக வந்து புத்தகங்களைக் கொடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil