Advertisment

ஜே.சி.பி இலக்கியப் பரிசு: எழுத்தாளர் பெருமாள் முருகன் தேர்வு

ஆசிரியர் காவேரி நம்பீசன் கூறுகையில், இந்த நாவல் ஏற்கனவே நம் நினைவில் இருந்து மறைந்து கொண்டிருக்கும், பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வாழ்க்கையை எளிமையாக சித்தரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Perumal Murugan

Perumal Murugan

ஜனனி கண்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘Fire Bird’ நாவல் 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான ஜேசிபி பரிசை (JCB Prize for Literature) வென்றது, இது சனிக்கிழமை புதுதில்லியில் அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த புத்தகத்தை பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா வெளியிட்டது. பரிசளிப்பு விழாவில் முருகனோ, கண்ணனோ கலந்து கொள்ளாததால், அவர்கள் சார்பில் வெளியீட்டாளரும் எழுத்தாளருமான மானசி சுப்ரமணியம் பரிசு பெற்றார்.

பெருமாள்முருகனின் ஆறாவது நாவல், ’ஆளண்டாப் பட்சி’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு தான் இந்த நாவல்.

கூட்டுக்குடும்பப் பிணைப்பிலிருந்து உறவுகளின் நிர்ப்பந்தத்தால் விடுபட்டுப் புலம்பெயர்ந்து வேற்றிடத்தில் நிலைகொள்ளும் உழவுக் குடும்பம் ஒன்றின் போராட்டமே இந்நாவல். மனிதர்களை அண்டவிடாத அதேசமயம் நல்லவர்களுக்கு உதவும் பண்பும் கொண்ட பிரம்மாண்டமான பறவையாகக் கொங்கு நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஆளண்டாப் பட்சியின் இயல்புகள் இந்நாவல் மாந்தர்கள் பலருக்கும் பொருந்திப் போகின்றன.

ஜேசிபி விருதின் ஐந்து பேர் கொண்ட நடுவர் குழுவின் தலைவர், எழுத்தாளர் ஸ்ரீநாத் பேரூர் பேசுகையில், Fire Bird’ நாவலில், முருகன் நிலத்தோடு பிணைந்திருக்கும் உயிர்களின் உலகளாவிய கதையை எடுத்து வியப்புடன் சொல்கிறார்.

ஜனனி கண்ணனின் மொழிபெயர்ப்பானது தமிழின் தாளங்களை மட்டுமல்ல, உலகில் இருப்பதற்கான ஒரு முழு வழியையும் ஆங்கிலத்தில் கொண்டு செல்கிறது.

நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த பத்திரிகையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்வாதி தியாகராஜன், இந்த நாவலை "ஒரு சாதாரண வாழ்க்கையின் சக்திவாய்ந்த, உணர்ச்சிகளைத் தூண்டுகிற கதை" என்றார்.

ஆங்கில வாசகர்களுக்கு, கிராமப்புற அல்லாத தமிழர்களுக்கு, இது ஒரு உலகம், ஒரு நேரம், ஒரு இடத்தில் மூழ்குவது, இது நமது நாட்டின் ஒரு பகுதியைப் பற்றிய உங்கள் புரிதலை வளப்படுத்தும். நீங்கள் கடைசிப் பக்கத்தைத் திருப்பிய பிறகு அதை உங்களுடன் எடுத்துச் செல்வீர்கள், என்று ஸ்வாதி கூறினார்.

ஆசிரியர் காவேரி நம்பீசன் கூறுகையில், இந்த நாவல் ஏற்கனவே நம் நினைவில் இருந்து மறைந்து கொண்டிருக்கும், பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு வாழ்க்கையை எளிமையாக சித்தரிக்கிறது.

இந்த விருதை ஜேசிபி குழுமத்தின் தலைவர் லார்ட் பாம்ஃபோர்ட் கானொலி வாயிலாக அறிவித்தார். ஜேசிபி இந்தியா லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் தீபக் ஷெட்டி நேரில் வழங்கினார்.

இந்த விருதில் நூலாசிரியருக்கு ரூ.25 லட்சமும், மொழிபெயர்ப்பாளருக்கு கூடுதலாக ரூ.10 லட்சமும் வழங்கப்படும்.

பெருமாள் முருகன் 12 நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் பல நான் ஃபிக்ஷன் புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது பத்து நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அவற்றில் ‘Seasons of the Palm’, ‘Current Show’ மற்றும் ‘One Part Womanஆகியவை அடங்கும்.

Fire Bird நாவலை தவிர தேஜஸ்வினி ஆப்தே-ரஹ்ம்- The Secret of More (Aleph Book Company), மனோரஞ்சன் பயபாரி- The Nemesis (Westland Books), விக்ரமஜித் ராம்- Mansur (Pan Macmillan India), மனோஜ் ரூப்தா- I Named my Sister Silence (Westland Books) ஆகியவை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற புத்தகங்கள் ஆகும்.

Read in English: Tamil writer Perumal Murugan wins 2023 JCB Literary Prize for Fire Bird

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment