/tamil-ie/media/media_files/uploads/2023/03/perumal.jpg)
2023-ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுப் போட்டிக்கு, தமிழக எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ’பூக்குழி’ நாவலின் ஆங்கில பிரதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இலக்கியத் துறையில் சிறந்த படைப்பாக கருதப்படும் புத்தகங்களுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசுப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில் 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசுப் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘பூக்குழி’ நாவலின் ஆங்கில பிரதியான ’பைர்’ புத்தகம் இந்த முறை புக்கர் பரிசுப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தோடு வேறு 12 எழுத்தாளர்கள் எழுதிய நாவல்களும் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
எழுத்தாளர் மெருமாள் முருகன் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் பிடித்தவர். ஏறுவெயில்,நிழல்முற்றம், கூளமாதரி, கங்கணம், மாதொருபாகன் உள்பட பல நாவல்களை அவர் எழுதியுள்ளார். இவர் எழுதிய மாதொருபாகன் நாவல் பெரும் சர்ச்சைக்குள்ளானது.
திருச்செங்கோடு, நீர் விளையாட்டு, பீக்கதைகள் உள்பட பல்வேறு சிறுகதை தொகுப்பை எழுதி உள்ளார். மேலும் கவிதை தொகுப்பு , மொழிபெயர்ப்பு என்று பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார். 2016ம் ஆண்டு வெளியான பூக்குழி நாவல் அனிருத்தன் வாசுதேவன் என்பவரால் ‘பைர்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தற்போது இந்த பிரதி புக்கார் பரிசு போட்டிக்கு தேர்வாகி உள்ளது.
புக்கர் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த
— Kandasubramanian (@Kandasubramani8) March 15, 2023
முதல் தமிழ் எழுத்தாளர்
பெருமாள் முருகன்..
வாழ்த்துகள் சார் ...
சேத்துமான் திரைப்படத்தின் கதை, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியது என்பது குறிப்பிடதக்கது.
பூக்குழி - பெருமாள் முருகன்:
— D.MURUGARAJ., IFS (@DMurugarajIFS) March 9, 2023
கலப்பு திருமணத்தை, அறிவில் பின்தங்கிய ஒரு சமூகம் எதிர் கொள்ளும் விதத்தையும் அதன் விளைவாக ஊர்கூடி நடத்தும் ஆணவகொலையையும் வட்டார வழக்கில் விறுவிறுப்பான நடையில் விவரிக்கிறது இப்புதினம். pic.twitter.com/6wIvFakdww
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.