கீழடி ஆய்வு, சென்னை வரலாறு… புதிய ஆளுனருக்கு ஸ்டாலின் வழங்கிய 2 புத்தகங்கள்!

Tamil News Update : தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழக பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் 2 புத்தகங்களை வழங்கியுள்ளார்.

Tamil Nadu Cm Given 2 Books To Governor R.N.Ravi :தமிழகத்தின் 15-வது ஆளுநராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ஆர்.என். ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில் 2 புத்தங்கள் வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழகத்தில் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பதவியில் இருக்கும்போதே பஞ்சாப் மாநில ஆளுராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அடுத்த ஒரு வாரத்தில் அவர் பஞ்சாப் மாநிலத்தின் முழுநேர ஆளுநகராக நியமிக்கப்பட்ட நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (செப்- 16), தமிழகம் வந்த அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், செப்டம்பர் 18-ந்தேதி (இன்று) பதவியேற்றுக்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதல்வர்  ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, ஆர்.என். ரவிக்கு தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  இதனையடுத்து முதல்வர் எதிர்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அரசியல் மட்டுமல்லாது வெளியுலகில் முக்கிய பிரமுகர்களை சந்திக்கும்போது தமிழகத்தின் பெருமைகளை எடுத்துரைக்கும் புத்தங்களை பரிசாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இரண்டு புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

இதில் ஒரு புத்தகம் தமிழகத்தின் வரலாற்றை உலகிற்கு எடுத்து சொல்லும் கீழடி தமிழர் நாகரிகம் பற்றி சொல்லும் கீழடி, மற்றும் தமிழகத்தின் பெருமைமிகு இடமான சென்னையின் வரலாறறை எடுத்து சொல்லும் மெட்ராஸ் என்ற இந்த இரண்டு புத்தகங்களையும் வழங்கியுள்ளார். இந்த 2 புத்தகங்ளும் தமிழகத்தின் வரலாற்றை பற்றியது என்பதால் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. புத்தகங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புத்தகங்களாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் யாருக்கு புத்தகங்கள் பரிசளித்தாலும், அதில் தமிழ் கலாச்சாரம் பற்றி எடுத்துரைக்கும் புத்தகங்களை வழங்கி வரும் நிலையில், இந்த இரு புத்தகங்களும் ஆங்கிலத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu cm stalin given two books to new governor rn ravi

Next Story
‘பாறையைத் தின்று பசியாறியவன் போய்விட்டான்’ கவிஞர் பிரான்சிஸ் கிருபா மறைவு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X