ஆண்டாள் பற்றிய தவறான கருத்து : வருத்தம் தெரிவித்தார், கவிஞர் வைரமுத்து

திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆண்டாளை தவறாக சொல்லியிருப்பதாக ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் எழுதிய பாசுரம்தான் திருப்பாவை. திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து, நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் ஆண்டாளை தவறாக சொல்லியிருப்பதாக எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி சம்பத் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயரும் கடும் கண்டனம் தெரிவித்தார். உடனடியாக வைரமுத்து வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லை என்றால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதன் விபரம் வருமாறு:

’’தமிழை ஆண்டாள் என்ற எனது கட்டுரையில் அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வரியைத்தான் நான் மேற்கோள் காட்டியிருந்தேன்; அது எனது கருத்தன்று. ஓர் ஆய்வாளரின் தனிக்கருத்து. ஆளுமைகளை மேன்மைப்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமை செய்வதன்று. அதற்கு இலக்கியமே தேவையில்லை. ஆண்டாளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் என் கருத்துக்களெல்லாம் ஆண்டாளின் பெருமைகளையே பேசுகின்றன என்பதை அனைவரும் அறிவர்.

எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்.’’

இவ்வாறு வைரமுத்து சொல்லியுள்ளார்.

×Close
×Close