பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் மரணம்; தலைவர்கள் இரங்கல்

தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 70.

Tho Paramasivan passes away, tho paramasvan, doctor tho paramasivan, anthoropolist tho paramasivan, தொ பரமசிவன் மரணம், தொ பரமசிவன், ஆய்வாளர் தொ பரமசிவன், பண்பாட்டு ஆய்வாளர் தொ பரமசிவன், தமிழ் பண்பாடு, tamil cultural research shcolar tho paramasivan, tho paramasivan death, tho paramasivan dies

தமிழகத்தின் புகழ்பெற்ற பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர் தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 70.

தமிழகத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை முன்வைத்து ஆய்வுலகின் கவனத்தை ஈர்த்தவர் ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன். திருநெல்வேலியில் பாளையங்கோட்டையில் வசித்து வந்தார். தமிழ் ஆய்வுலகில் பண்பாட்டு ஆய்வுகளில் தனது ஆய்வுத்திறந்தால் புதிய பார்வைகளைத் திறந்தவர்.

ஆய்வாளர் தொ.பரமசிவன், இளையான்குடி, ஜாகிர் உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராசர் கல்லூரியிலும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் ஆய்வுலகில் தொ.ப என்று அழைக்கப்படும் ஆய்வாளர் தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், அழகர் கோயில், பண்பாட்டு அசைவுகள், தெய்வம் என்பதோர், இதுவே சனநாயகம், சமயங்களின் அரசியல், இந்து தேசியம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தமிழ் மக்கள் திறள் பண்பாடு, வழிபாடுகள் குறிட்து தொ.ப-வின் ஆய்வுகள் மார்க்சிய, பெரியாரிய நோக்கில் அமைந்தவை. மக்கள் பண்பாடு, வழிபாட்டு முறைகள் குறித்து திராவிட கருத்தியலுடன் முன்வைத்தவர். இவருடைய பண்பாட்டு ஆய்வுகள் இளம் ஆய்வாளர்களுக்கு ஒரு திறப்பை ஏற்படுத்தியது.

தமிழ் ஆய்வுலகின் முக்கியமான ஆளுமையாகவும் ஆய்வாளராகவும் விளங்கிய தொ.பரமசிவன் முதுமை காரணமாக உடல்நலிவுற்றிருந்தார். இந்த நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு என்று எழுத்தாளர்கள், தலைவர்கள், மாணவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆய்வாளர் தொ.பரமசிவன் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவு, தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும்; ஆயிரக்கணக்கான ஆய்வு மாணவர்களை உருவாக்கிய சிற்பிக்கு எனது சிரம் தாழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

விசிக எம்.பி எழுத்தாளர் ரவிக்குமார், “தொ.ப என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் மறைந்தார். அவருக்கு என் அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.

தொ.பரமசிவன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம்.” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tho paramasivan passes away tamil cultural research shcolar tho paramasivan

Next Story
அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்Tamil language, tamil Governance language act week, தமிழ் ஆட்சி மொழி சட்டம் வாரம், வேலூர், தமிழ்நாடு, எழுத்தாளர் அழகிய பெரியவன், celebration of tamil governance language law week, tamil nadu, vellore districts, azhagiya periyavan
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com