எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன் எழுதிய ‘தாளடி’ நாவலுக்கு திருப்பூர் இலக்கிய விருது அறிவிப்பு

எழுத்தாளர் சீனிவாசன் நடராஜனுக்கு ஆர்.சண்முகசுந்தரம் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Tirupur literature award, R Shanmugasundaram memorial award, R Shanmugasundaram memorial award announced to Writer Srinivasan Natarajan's Thaladi Novel, ஓவியர், எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன் எழுதிய தாளடி நாவல், திருப்பூர் இலக்கிய விருது, ஆர்.சண்முகசுந்தரம் நினைவு விருது, எழுத்தாளர் சீனிவாசன் நடராஜனுக்கு ஆர்.சண்முகசுந்தரம் நினைவு விருது, அறிவிப்பு, Writer Srinivasan Natarajan's Thaladi Novel, 1967 Thaladi Novel, tamil literature

ஓவியர், எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன் எழுதிய தாளடி நாவலுக்கு திருப்பூர் இலக்கிய விருது ஆர்.சண்முகசுந்தரம் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்த மாபெரும் படுகொலையான கீழ்வெண்மணியில் 44பேர் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஓவியர் எழுத்தாளர் சீனிவாசன் நடராஜன், எழுதிய 1967 தாளடி நாவலுக்கு திருப்பூர் இலக்கிய விருது ஆர்.சண்முகசுந்தரம் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சீனிவாசன் நடராஜன் எழுத்தாளர் மட்டுமல்ல அவர் சிறந்த ஓவியருமாவார். எழுத்தாளர் சீனிவாசன் நடராஜனுக்கு ஆர்.சண்முகசுந்தரம் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

சீனிவாசன் நடராஜன் ( ஜனவரி-1972) நாவலாசிரியர், ஓவியர், புகைப்படக்கலைஞர். ராஜமன்னார்குடியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு அரசின் 2007-ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, தேசிய அளவிலான இரண்டு விருதுகள், மாநில அரசின் விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர்.

‘விடுதலை கலை இலக்கியப் பேரவை’யின் 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவல் விருதினை ‘ தாளடி1967’ நாவலுக்காகப் பெற்றவர். ஆய்வு மாணவராக இவர் வெளியிட்ட ஆய்வு கட்டுரைக்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்திய அளவிலும் உலக அளவிலும் 30 ஆண்டுகளாகப் பல கண்காட்சிகளை நடத்தி வருகிறார். சைவசித்தாந்தம் படித்தவர். நுண்கலைக் கல்வி வண்ணக்கலைப் பிரிவில் இளங்கலை, முதுகலைப் பட்டம், மேலாண்மையில் முதுகலைப்பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர்.

1991-இல் சென்னை விமான நிலையத்தில் இவரின் முதல் தனிநபர் கண்காட்சி நடந்தது. அதே ஆண்டில் இவரது ‘நோட்புக் கவிதைகள்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து விடம்பனம், தாளடி, காகிதப்பூ என மூன்று நாவல்கள், அச்சப்படத் தேவையில்லை, நம்மோடுதான் பேசுகிறார்கள், புனைவு, கனவு விடியும், கலை அல்லது காமம் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். பிரபஞ்சத்தை வாசித்தல், சிறுகோட்டுப் பெரும்பழம் என இரண்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்திருக்கிறது. ‘கணையாழி’ இலக்கிய இதழின் இணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.

தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டில் துவங்கிய பள்ளிக்கூட மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தின் புத்தகங்களுக்கு, வடிவமைப்புக்கான கொள்கை குறிப்புகளை எழுதி வடிவமைத்தவர். தலைமை வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு 60 நாட்களில் 35,000 பக்கங்களுக்கு மேல் வடிவமைத்த குழுவின் தலைவராகச் செயல்பட்டார். தமிழ்நாடு அரசு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் செயல்பட்டவர். தமிழ் இலக்கியத்தில், கவிதைகளுக்கான ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய கவிஞர் ஆத்மாநாம் விருதை 5 ஆண்டுகளாக, ஆண்டு தோறும் வழங்கும் ஆத்மாநாம் அறக்கட்டளையின் நிறுவனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tirupur literature award r shanmugasundaram memorial award announced to writer srinivasan natarajans thaladi novel

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com