பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் இரண்டு நாவல்களை வெளியிடும் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாதொருபாகன் நூலுக்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, “பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் இறந்துவிட்டான்”, என பெருமாள் முருகன் அறிவித்தார். அதன் பின்பு அவருக்கு வந்த ஆதரவுகள் ஏராளம். இந்நிலையில்,கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் எழுதிய, `பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை` நாவல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.
மாதொருபாகன் நாவலுக்கு ஏற்ப்பட்ட எதிர்ப்பை சற்றும் எதிர்ப்பார்க்காத பெருமாள் முருகன், தனது எழுத்து சுதந்திரத்தை மீண்டும் கொண்டு வந்தது. அந்த வழக்கில் நீதிபதி தந்த தீர்ப்பு தான் என்று இன்று வரை சொல்லி வருகிறார். அதே சமயத்தில் கடுமையான எதிர்ப்புகள் மத்தியில் வெளியான மாதொருபாகன் இலக்கியவாதிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதே போல், அவர் எழுதிய பூனாச்சி நாவலும் அவரின் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்டது. தற்போது சென்னையில் வசித்து வரும் பெருமாள் முருகன் தனது அடுத்த படைப்பு குறித்த கருபொருளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நடைப்பெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற அவர், தனது அடுத்த நாவலான கழிமுகம் குறித்தும் குறிப்பு தந்தார்.
நகர வாழ்க்கையில் ஒரு மத்தியதர வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை குறித்து பேசுவது தான் எனது அடுத்த படைப்பு என்றார். இந்நிலையில், பெருமாள் முருகனின் மாதொருபாகன் மற்றும் பூனாச்சி ஆகிய இரண்டு நாவல்களையும் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து, உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை அமெரிக்கா நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.
குரோ/அட்லாண்டிக் என்ற அமெரிக்க பதிப்பு நிறுவனம், இந்த புத்தக்ஜத்தை மொழிப்பெயர்த்து இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 100,000 பிரதிகளை வெளியிடவுள்ளது. இதுக்குறித்து பேசியுள்ள பிரபல எழுத்தாளர் ஒருவர், ”தலைச்சிறந்த படைப்பாளியான பெருமாள் முருகனின் இரண்டு செம்மையான படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்படவுள்ளது அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்” என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.