Advertisment

தமிழ் இலக்கியத்துக்கான அமெரிக்க தமிழர்களின் விளக்கு விருதுகள் அறிவிப்பு

விளக்கு விருது தமிழ் ஆய்வு புலத்தில் தலித்திய நோக்கில் ஒரு புதிய ஆய்வு முறையியலை உருவாக்கி வளர்த்தெடுத்துள்ள எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்துக்கும் தமிழ் கவிதையில் தனது தனித்துவமான கவிதைமொழியாலும் தலித் பெண்ணிய குரலை பெரும் வீச்சுடன் எழுதிய கவிஞர் சுகிர்தராணிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vilakku award announced to Writer Stalin Rajanagam, Vilakku award announced to poet Sukirtharani, விளக்கு விருது, அமெரிக்க தமிழர்களின் விளக்கு விருது அறிவிப்பு, எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், கவிஞர் சுகிர்தராணி, Tamil literature, Vilakku award, Tamil literature award

கவிஞர் சுகிர்தராணிக்கும், எழுத்தாளர் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கத்துக்கும் அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2020ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவு விருதுகளை வழங்கி வருகிறது. தமிழ் இலக்கிய உலகில் விளக்கு விருது மிகப் பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. விளக்கு விருது தமிழில் புனைவு எழுதும் படைப்பாளிகும் அபுனைவு எழுதும் படைப்பாளி என இருவருக்கு அளிக்கப்படுகிறது. இந்த விருது படைப்பாளிகளின் மொத்தப் படைப்பை கவனத்தில் கொள்கிறது. அந்த வகையில், விளக்கு இலக்கிய அமைப்பின் 2020ம் ஆண்டுக்கான 25வது புதுமைப்பித்தன் நினைவு விருது தமிழ் ஆய்வு புலத்தில் தலித்திய நோக்கில் ஒரு புதிய ஆய்வு முறையியலை உருவாக்கி வளர்த்தெடுத்துள்ள எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்துக்கும் தமிழ் கவிதையில் தனது தனித்துவமான கவிதைமொழியாலும் தலித் பெண்ணிய குரலை பெரும் வீச்சுடன் எழுதிய கவிஞர் சுகிர்த ராணிக்கும் விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் திலகவதி, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் மூன்று பேரும் நடுவர் குழுவாக செயல்பட்டு, 2020ம் ஆண்டிற்கான விளக்கு விருதுக்கு தேர்வு செய்யும் நடுவர் குழுவாக செயல்பட்டு அமெரிக்க தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் 2020ம் ஆண்டுக்கான 25வது ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுக்கு கவிஞர் சுகிர்தராணியையும், எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தையும் தேர்வு செய்துள்ளனர்.

விளக்கு விருதுடன் படைப்பாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள விருது வழங்கும் நிகழ்ச்சிகள் விரைவில் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டிற்கான விளக்கு விருதுகள் கவிஞர் சுகிர்தராணிக்கு கவிதைகள் மற்றும் பெண்ணியச் செயல்பாடுகளுக்காகவும் எழுத்தாளர் பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கத்துக்கு தலித்திய நோக்கில் இலக்கிய, சமய மற்றும் அனைத்து வரலாற்றுப் பிரதிகளின் உண்மைத் தன்மையை அயோத்திதாசர் முறைமையில் பிரதி ஆய்வுகள், தமிழகத்தில் அழிக்கப்பட்ட அடையாளம், மறைக்கப்பட்ட பௌத்தம் பற்றிய கள ஆய்வுகளும் என மாற்று அரசியலையும் மாற்றுப் பண்பாட்டையும் உருவாக்குதல் ஆகியவற்றுக்காக அளிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் சுகிர்தராணி

கவிஞர் சுகிர்தராணி, இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்திற்கு அருகில் உள்ள இலாலாப்பேட்டை என்னும் கிராமத்தில் 1973ல் பிறந்தவர். தாய் தவமணி, தந்தை - சண்முகம். கவிஞர் சுகிர்தராணி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கவேரிப்பாக்கத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கவிஞர் சுகிர்தராணி 1990கலின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதி வருகிறார். இதுவரை கைப்பற்றி என் கனவு கேள், (2002), இரவு மிருகம் (2004), அவளை மொழிபெயர்த்தல் (2006), தீண்டப்படாத முத்தம் (2010), காமத்திப்பூ (2012), இப்படிக்கு ஏவாள் (2015) ஆறு கவிதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகிலுள்ள முன்னூர் மங்கலம் என்ற ஊரில்1980ல் பிறந்தவர், தந்தை ராஜாங்கம், தாயார் காளியம்மால், எளிய விவசாய குடும்பத்தில் பிறந்த முதல் தலைமுறை பட்டதாரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். மனைவி பூர்ணிமா, புத்தமித்ரன், ஆதன் சித்தார்த் என்று இரு மகன்கள் உள்ளனர்.

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், ஜனநாயகமற்ற ஜனநாயகம் தீண்டப்படதா நூல்கள்: ஒளிபடா உலகம் ( டிசம்பர், அயோத்திதாசர்: வாழும் பௌத்தம், எழுதாக் கிளவி: வழிமறிக்கும் வரலாற்று அனுபவங்கள், தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம், ஆணவக் கொலைகளின் காலம் என 13க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment