scorecardresearch

பெண் எழுத்தாளர் சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது: தமிழ் இலக்கிய உலகுக்கு கூடுதல் பெருமை

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022-ம் ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் எழுத்தாளர் சிவசங்கரி
பெண் எழுத்தாளர் சிவசங்கரி

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022-ம்  ஆண்டுக்கான சரஸ்வதி சம்மான் விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு வெளியான சூரிய வம்சம்- நினைவலைகள் என்ற இவருடைய நூலுக்காக சிவசங்கரிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1991-ம் ஆண்டு முதல் கே.கே பிர்லா நிறுவனத்தால் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக இந்த விருதினைப் பெறுபவர்களுக்கு ரூ.15 லட்சம்  பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

இந்தியாவின் 22 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நூலுக்கு, சிறந்த உரை நடை,  கவிதை இலக்கியப் படைப்புக்கு  ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

தமிழ் எழுத்தாளர் அ.அ.மணவாளன், இந்திரா பார்த்தசாரதி ஆகியோருக்கு இந்த விருது முன்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Literature news download Indian Express Tamil App.

Web Title: Women writer gets saraswati samman 2022 award