டெட் தேர்வு: அரசு ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதில் அலட்சியமாக இருக்கலாமா? - எழுத்தாளர் சோ.தர்மன் கேள்வி

“நிதி ஒதுக்கி கல்வியை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதில் அலட்சியமாக இருக்கலாமா?” என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நிதி ஒதுக்கி கல்வியை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதில் அலட்சியமாக இருக்கலாமா?” என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
So Dharman

எழுத்தாளர் சோ.தரமன் Photograph: (facebook.com/Cho.Dharman1)

ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்த நிலையில், ஆசிரியர்களைக் தமிழக அரசு கைவிடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். இதற்கு, “நிதி ஒதுக்கி கல்வியை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதில் அலட்சியமாக இருக்கலாமா?” என்று சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் கேள்வி எழுப்பியுள்ளார். 

Advertisment

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் ‘டெட்’ தகுதித் தேர்வை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பல்வேறு ஆசிரியர்கள் கூட்டமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், “கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் இருந்து மொழி, மதவாரி சிறுபான்மை பள்ளிகளுக்கு விலக்கு அளித்து பிறக்கப்பட்ட தீர்ப்பில் சில சந்தேகங்கள் உள்ளன. அவற்றை களைய அரசியல் சாசன அமர்வை ஏற்படுத்தி விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்கிறோம். அதுவரை, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை ஏற்றுத்தான் நடக்க வேன்டும்.

கட்டாயக் கல்வி உரிமை சட்டம் வருவதற்கு முன்பாக 20 அல்லது 30 ஆண்டுகள் பணியில் உள்ள ஆசிரியர்ககளை ‘டெட்’ தேர்வை எழுதி தகுதி பெறச் சொல்வது பொருத்தமாக இருக்காது என்பதால், உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, பணிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளிக்கிறோம். அதேநேரம் 5 ஆண்டுகளுக்கு குறைவான பணிக்காலம் கொண்ட ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற விரும்பினால் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

Advertisment
Advertisements

ஆனால், கட்டாயக் கல்வி உரிமை சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக ஆசிரியராக பணியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலத்தை கொண்ட ஆசிரியர்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்களை ஓய்வு பெற்றவர்களாக கருதி, ஓய்வூதிய பலன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மாற்றுத் திறன் உள்ளிட்ட குறைபாடுகளால் ‘டெட்’ தேர்வை எழுத முடியாத ஆசிரியர்களின் கோரிக்கையை மாநில அரசுகள் பரிசீலிக்கலாம். ஆசிரியர் பணியில் சேர விரும்பும் ஒவ்வொருவரும், பதவி உயர்வை விரும்பும் ஆசிரியர்களும் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று முழு தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியில் தொடர முடியாது” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கூறுகையில், “ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கின் தீர்ப்பு விவரம் முழுமையாக கிடைத்த பிறகு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்.  எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது, யாரும் கவலைப்பட வேண்டாம்” என்று உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில்,  “ஆசிரியர்கள் கேட்கின்ற அனைத்து உரிமைகளையும் அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.அதேசமயம் தகுதி தேர்வை இன்னும் கடுமையாக்கி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அரசு நடத்தி தகுதியற்ற ஆசிரியர்களை வெளியேற்ற வேண்டும்.” என்று சாகித்ய அகாடமி எழுத்தாளர் சோ. தர்மன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், “பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் "எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியர்களை இந்த அரசு கை விடாது"என்று அறிக்கை விடுகிறார். அரசுப்பள்ளிகளுக்கும் கல்விக்கும் பட்ஜெட்டில் இதே அரசுதான் ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீட்டில் அதிகப்படியான நிதியை ஒதுக்குகிறது.

அப்படி நிதி ஒதுக்கி கல்வியை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதில் அலட்சியமாக இருக்கலாமா? ஆசிரியர்களுக்கு இன்னும் அதிகமான சலுகைகள் சம்பள உயர்வு தாராளமாக கொடுக்கட்டும்.ஆட்சேபனை இல்லை. ஆனால், அவர்கள் தங்கள் தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள அரசும் நீதிமன்றமும் வழங்குகின்ற ஆலோசனைகளை கறாராக பின்பற்ற வேண்டும்.” என்று எழுத்தாளர் சோ. தர்மன் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து எழுத்தாளர் சோ தர்மன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் கட்டாயம் தகுதி தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்திரவிட்டுள்ளது. உடனே எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் அரசு இத்தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்கள்.

இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் "எந்தச் சூழ்நிலையிலும் ஆசிரியர்களை இந்த அரசு கை விடாது" என்று அறிக்கை விடுகிறார். அரசுப்பள்ளிகளுக்கும் கல்விக்கும் பட்ஜெட்டில் இதே அரசுதான் ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீட்டில் அதிகப்படியான நிதியை ஒதுக்குகிறது.

அப்படி நிதி ஒதுக்கி கல்வியை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்துவதில் அலட்சியமாக இருக்கலாமா? ஆசிரியர்களுக்கு இன்னும் அதிகமான சலுகைகள் சம்பள உயர்வு தாராளமாக கொடுக்கட்டும். ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் தகுதிகளை மேம்படுத்திக் கொள்ள அரசும் நீதிமன்றமும் வழங்குகின்ற ஆலோசனைகளை கறாராக பின்பற்ற வேண்டும்.

ஆசிரியர்கள் கேட்கின்ற அனைத்து உரிமைகளையும் அரசு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அதேசமயம் தகுதி தேர்வை இன்னும் கடுமையாக்கி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை அரசு நடத்தி தகுதியற்ற ஆசிரியர்களை வெளியேற்ற வேண்டும். மற்ற அரசுப் பணியாளர்களையும் ஆசிரியர்களையும் ஒன்று படுத்திப் பார்க்கக் கூடாது. ஆசிரியர் பணி என்பது ஒரு லட்சிய நோக்கம் உள்ள இந்த நாட்டை சீரமைக்க தேசப்பற்றை ஊட்ட சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஒரு தெய்வீகப் பணி என்பதை அரசும் ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் பனிரெண்டாம் வகுப்பிற்கு தமிழ் பாடம் நடத்துகின்ற தமிழாசிரியர்கள் நாற்பத்தி எட்டுப் பேருக்கு "பணித்திறன் பயிற்சி முகாம்"ஒன்றை அரசு நடத்தியது.இறுதிநாளன்று ஆசிரியர்களுடன் கலந்துரையாட நான் அழைக்கப்பட்டிருந்தேன்.

எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவங்களை நான் பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன் அந்த அனுபவத்திற்குப் பிறகு ஆசிரியர்கள் மேல் நான் வைத்திருந்த மதிப்பு மரியாதையை நான் மாற்றிக் கொண்டேன். மற்றப்படி ஆசிரியர்கள் மீது எனக்கு எவ்வித விருப்போ வெறுப்போ அறவே கிடையாது. ஆசிரியர்கள் சமூகத்தால் மதிக்கப்பட வேண்டிய கொண்டாடப்பட வேண்டியவர்கள்.” என்று எழுத்தாளர் சோ.தர்மன் பதிவிட்டுள்ளார்.

Tet

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: