எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு

எழுத்தாளர் யெஸ். பாலபாரதி பத்திரிகையாளராகவும் ஊடகவியலாளராகவும் பணிபுரிந்துள்ளார். யெஸ். பாலபாரதிக்கு சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

writer S Balabarathi gets Bala Sahitya Puraskar award, Sahitya Academy Award, S Balabarathi, பால சாகித்ய புரஸ்கார் விருதுகள், யெஸ் பாலபாரதி, சாகித்ய அகாடமி, தமிழ் இலக்கியம், சிறுவர் இலகியம், மரப்பாச்சி சொன்ன ரகசியம், children literature, marappachi sonna ragasiyam, tamil literature, Bala Sahitya Puraskar award

எழுத்தாளர் யெஸ். பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி அளிக்கும் 2020ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, மத்திய அரசின் சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அதே போல, வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருதும் சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புகளுக்கும் பால சாகித்ய புரஸ்கார் சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. பால சாகித்ய புரஸ்கார் சாகித்ய அகாடமி விருது பெறுபவர்களுக்கு செப்பு பட்டயத்துடன், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், தமிழில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த சிறுவர் இலக்கிய படைப்புக்கான பால சாகித்ய புரஸ்கார் சாகித்ய அகாடமி விருது எழுத்தாளார் யெஸ். பாலபாரதி எழுதிய ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ என்ற நாவலுக்காக வழங்கப்படுகிறது என்று சாகித்ய அகாடமி நிறுவனம் அறிவித்துள்ளது.

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல், செம்மரக்கட்டையால் செய்யப்பட்ட மரப்பாச்சிப் பொம்மை ஒன்று, ஷாலினி எனும் சிறுமிக்குக் கிடைக்கிறது. அப்பொம்மை திடீரெனப் பேசத் தொடங்குகிறது. அப்போது ஷாலினிக்குக் கிடைக்கும் சுவாரசியமான அனுபவங்களைத்தான் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி நாவலாக விரித்துள்ளார்.

எழுத்தாளர் பாலபாரதி பத்திரிகையாளராகவும் ஊடகவியலாளராகவும் பணிபுரிந்துள்ளார். எழுத்தாளர் யெஸ். பாலபாரதிக்கு சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் , நமது மன்றத்தின் உறுப்பினர் யெஸ். பாலபாரதி எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலுக்கு சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியத்திற்காக அளிக்கப்படும் இந்த சாகித்ய அகாடமி விருது , நம்முடைய பத்திரிகையாளர் பாலபாரதிக்கு கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. பத்திரிகையாளர் யெஸ். பாலபாரதிக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளது.

எழுத்தாளர் யெஸ். பாலபாரதி, ‘ஆமை காட்டிய அற்புத உலகம்’, ‘சுண்டைக்காய் இளவரசன்’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Literature news here. You can also read all the Literature news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Writer s balabarathi gets bala sahitya puraskar award

Next Story
எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா விருது; ரூ.5 லட்சம் பரிசு… எழுத்தாளர்கள், வாசகர்கள் வாழ்த்துwriter Konangi gets Ki Rajanarayanan award, writers and readers wishes, writer Konangi, எழுத்தாளர் கோணங்கிக்கு கிரா விருது, கோணங்கிக்கு ரூ 5 லட்சம் பரிசு, கி ராஜாநாராயணன் விருது, Konangi, tamil literature, tamil modern literature
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com