Advertisment

எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் மரணம்; தமிழ் இலக்கிய உலகம் புகழஞ்சலி

எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திங்கள்கிழமை (நவம்பர் 7) காலமானார். அவருடைய மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள், இயக்கங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Writer Vizhi Pa Idhayavendhan passed away, Vizhi Pa Idhayavendhan death, எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன் மரணம், விழி.பா. இதயவேந்தன், dalit literature, tamil literature

தமிழ் இலக்கியத்தில் முப்பதாண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்டோர் எழுத்துகள், அரசியல், அழகியல் என இயங்கி வந்த எழுத்தாளர் கவிஞர் விழி.பா. இதயவேந்தன் உடல்நலக் குறைவால் காலமானார்.

Advertisment

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தைச் சேர்ந்தவர். கடலூரை அடுத்த நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ் இலக்கியத்தில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தலித் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்.

எழுத்தாளர் விழி. பா. இதயவேந்தன் அவர்கள் சிறுகதை, கவிதை, கட்டுரை, குறுநாவல், வீதிநாடகம் என்று பன்முகம் கொண்ட எழுத்தாளர். இவரின் படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இதழ்களில் வெளி வந்துள்ளது.

எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திங்கள்கிழமை (நவம்பர் 7) காலமானார். அவருடைய மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள், இயக்கங்கள் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

எழுத்தாளர் விழி.பா. இதயவேந்தன் மறைவுக்கு விழுப்புரம் தொகுதி எம்.பி, எழுத்தாளர் ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில்குறிப்பிட்டிருப்பதாவது: “எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் மறைந்தார் என்ற செய்தி நிலைகுலையச் செய்துவிட்டது. நேற்று முன்தினம் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்தபோது மீண்டெழுந்துவிடுவார் என்றுதான் நம்பினேன்.

வென்டிலேட்டரில் இருந்த அவர் என்னை நன்றாக அடையாளம் கண்டுகொண்டார். தலையை உயர்த்தி எழுந்திருக்க முயற்சித்தார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவரும் தெரிவித்தார்.
சுமார் 15 ஆண்டுகளாக டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தார். உடல் நலிவைத் தனது படைப்புகளால் வென்று வந்தார். இப்படி சட்டென்று மறைந்துவிடுவார் என நினைக்கவில்லை.

தனது அண்மைக்கால சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிடப் போகிறார் என்ற அறிவிப்பைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. மருத்துவமனையில் அவரைப் பார்த்தபோது இப்போது ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார் என அவரது மனைவி தெரிவித்தார். அதை முடித்து வெளியிடுவார் என நம்பினேன்.

எழுத்தோடு நிற்காமல் சமூக அக்கறையோடு ஒரு செயல்பாட்டாளராகவும் இருந்தவர். 1980 களின் முற்பகுதியில் அவரை முதன்முதலாக சந்தித்தேன். இந்த 40 ஆண்டுகளில் அவரது கடப்பாடும், உழைப்பும் மேலும் மேலும் உறுதியடைந்தே வந்திருக்கின்றன. பேராசிரியர் கல்யாணியால் அடையாளம் காணப்பட்டு கவிஞர் பழமலை, இந்திரன் முதலானவர்களால் ஆற்றுப்படுத்தப்பட்டவர்.
தலித் - இலக்கிய இதழில் அவரது சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தேன். அவர் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்பாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.
தோழர் சூரியதீபன் இரங்கல் நிகழ்ச்சியில் அவரும் பேசுவதாக இருந்தது. அன்றுதான் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்குச் சென்றார். தொலைபேசியில் விசாரித்தபோது ‘ ஆட்டோவில் சென்றபோது இடுப்பில் தசை பிடித்துக்கொண்டது’ என்றுதான் சொன்னார். திடீரென அவரது உடல்நிலை இப்படி ஆகும் என யாரும் நினைக்கவில்லை.

தமிழில் தலித் இலக்கியம் உருவானபோது அதற்குப் பெருமளவில் தனது சிறுகதைகளால் பங்களிப்புச் செய்தவர் அவர்தான். எழுத்தில் வாழ்வார்! அவருக்கு என் அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment