ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளையுடன் இணைந்து இந்த ஆண்டு நாவல் போட்டியை அறிவித்துள்ளது. சிறந்த நாவலுக்கு ரூ.பரிசு தொகையும் விருதும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட நாவல் போட்டிக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் நாவல் போட்டிக்கு தமிழ் நவீன எழுத்தாளர்கள் பலரும் தங்கள் நாவல்களை போட்டிக்கு அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிகின்றனர்.
ஸீரோ டிகிரி தமிழரசி அறக்கட்டளை இணைந்து 2021ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாவல் போட்டி நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாவலுக்கு பரிசு கொடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே வாழ்நாள் சாதனையாளர் விருது ஒன்றும் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாவல் போட்டியில் கலந்துகொள்வதற்கான விதிமுறைகள்:
நாவல் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். ஒரு நபரொரு நாவல் மட்டுமே அனுப்ப அனுமதி. நாவலின் அளவு குறைந்த பட்சம் 30 ஆயிரத்தில் இருந்து அட்கபட்சம் 35 ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்க வேண்டும். நாவலை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (word, doc)ல் அனுப்ப வேண்டும். கையெழுத்து பிரதி மற்றும் பிடிஃப் வடிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி zerodegreeaward@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 15, 2021. அதற்குப் பிறகு வரும் நாவல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்தப் போட்டி குறித்த எல்லா சந்தேகங்களுக்கும் zerodegreeaward@gmail.com மின்னஞ்சல் வழியாக மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
உறுதிமொழி
நாவல் போட்டிக்கு படைப்புகளை அனுப்புபவர்கள், தாங்கள் எழுதியுள்ள நாவல், ஏற்கெனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழி இருத்தல் வேண்டும்.
படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ, பதிப்பகத்துக்கோ அச்சு வடிவிலோ அல்லது மின்னூலாகவோ அனுப்புவதாக இல்லை என்று உறுதியளிக்க வேண்டும்.
மேலும், படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவலோ அல்ல என்கிற உறுதிமொழியையும் படைப்புடன் இணைத்திருக்க வேண்டும்.
தேர்வும் பரிசும்
இலக்கியப் பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருது ஒருவருக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 10 நாவல்களின் நெடும் பட்டியல் அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும். நெடும்பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 5 நாவல்களின் குறும்பட்டியல் நவம்பர் 15ம் தேதி வெளியிடப்படும். இறுதியாக ஒரு நாவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
வெற்றி பெற்ற நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் விருதும் நவம்பரில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
முதல் பரிசு பெற்ற நாவல் தமிழிலும் - மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலும் சீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் வெளியிடப்படும். நாவல் தேர்வில் நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இப்போட்டியில் குறும்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படும் 5 நாவல்களையும் ஸீரோ டிகிரி பப்ளிஷின் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸீரோ டிகிரி பளிஷிங் அறிவித்துள்ள நாவல் போட்டிக்கு எழுத்தாளர்கள் பலரும் நாவல் எழுதி வருவதாக பத்திரிகையாளர், எழுத்தாளர் கவிஞர் அமிர்தம் சூர்யா கூறினார். எழுத்தாளர்கள் பரிசுக்காக நாவலை எழுதவில்லை என்றாலும் தங்கள் நாவல் பிரசுரம் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதி வருகின்றனர். நான் எறவானம் என்ற சென்னை புர்வகுடி மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ஒரு பின் நவீனத்துவ நாவலை எழுதி வருவதாக அமிர்தம் சூர்யா கூறினார். ஸீரோ டிகிரியின் நாவல் போட்டிக்கு தனது எழுத்தாளர்கள் நண்பர்கள் வானவன் ஆகியோர் நாவலை எழுதி முடித்து செப்பம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாவலை போட்டிக்கு அனுப்ப கடைசி தேதி செப்டம்பர் 15ம் தேதி என்பதால் எழுத்தாளர்கள் நாவலை முடித்து அனுப்புவதற்கு தயாராகி வருகிறார்கள் என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.