கொஞ்ச நாளில் அதிக வட்டி வேணுமா? இந்த ஃபிக்ஸட் டெபாசிட் ஸ்கீம்களை பாருங்க!
முதலீட்டாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட் மீது முழுமையான வட்டி விகிதங்கள் விதிக்கப்படுவதால், வைப்புத் தொகை நிறைவடைந்த காலத்திற்கு பின்னான, முதலீட்டாளர்களின் வருமானத்தை பாதிப்படையச் செய்யும். ஃபிக்ஸட் டெபாசிட்டின் மீதான வட்டியை, சில வங்கிகள் அதிகப்படியான விகிதங்களில் வழங்குவதால், முதலீட்டாளர்கள் அவற்றை நிதானத்துடன் பரிசீலித்து பயன் பெறலாம்.
நிலையான வருமானம், பணிக்கால சேமிப்புத் திட்டங்கள், அதிகப்படியான பணப்புழக்கங்கள் ஆகியவற்றால் இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் பிரபலமான முதலீட்டு கருவியாக இருந்து வருகிறது. இதனிடையே, ரிசர்வ் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் மீதான ரெப்போ விகிதங்கள் 4 சதவீதமாகவே தொடர்வது, ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்திருப்பவர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
Advertisment
முதலீட்டாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட் மீது முழுமையான வட்டி விகிதங்கள் விதிக்கப்படுவதால், வைப்புத் தொகை நிறைவடைந்த காலத்திற்கு பின்னான, முதலீட்டாளர்களின் வருமானத்தை பாதிப்படையச் செய்யும். ஃபிக்ஸட் டெபாசிட்டின் மீதான வட்டியை, சில வங்கிகள் அதிகப்படியான விகிதங்களில் வழங்குவதால், முதலீட்டாளர்கள் அவற்றை நிதானத்துடன் பரிசீலித்து பயன் பெறலாம்.
ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி விகித படிநிலைகளை முதலீட்டாளர்கள் வரிசைப்படுத்துவதோடு, முதலீடு செய்யப்படும் தொகையை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலன் அதிகப்படியான வருமானம் பெறலாம். உதாரணமாக, 5 லட்சம் ரூபாயை 5 வருடங்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் செய்கிறீர்கள் எனில், ஒற்றை முதலீட்டை உடைத்து ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து என பல முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறலாம்.
நடுத்தர காலத்திற்கு நிரந்தர வைப்புத் தொகையில் முதலீடு செய்ய விரும்பினால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள வங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் அதிக வருமானத்தினை ஈட்டலாம். முதலீட்டாளர்களின் வயது, தேர்வு செய்யப்படும் வங்கி, பதவிக்காலம், முதலீட்டுத் தொகை ஆகியவற்றைப் பொறுத்து, வட்டி விகிதங்கள் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.