வங்கிகளில் சேமிப்புக் கணக்கை தொடங்கும் போது, வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எதிர்கால திட்டங்களைப் பற்றி அறிந்துக் கொள்வதன் மூலமாக, நிலையான வருமானம் பெறலாம். பாரத ஸ்டேட் வங்கி, முதலீட்டாளர்களுக்கென பிரத்யேக சேமிப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் வரிசையில், பாரத ஸ்டேட் வங்கியின் நிரந்தர வைப்புத் திட்டம் ( Recurring Deposit ), நிலையான வருமானம் பெற குறிப்பிடத்தக்க திட்டங்களின் ஒன்று.
தற்போது, இந்த திட்டத்தின் மூலம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய தொடங்கினால், வைப்புத் தொகை மீதான வருவாய் விகிதம், எஸ்பிஐ வட்டி விகிதம் 2020 கணக்கீட்டின் படி, முதலீட்டு காலம் முழுவதும் பொருந்துவதால் வருவாய் உயரும். இதனிடையே, மற்ற சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை எஸ்பிஐ குறைத்திருக்கும் வேளையில், நிரந்தர வைப்புத் திட்டத்தை (ஆர்.டி) தேர்ந்தெடுத்து பயன் பெறலாம்.
எஸ்பிஐ-ன் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களில், முதல் இரண்டாண்டுகளுக்கு முதலீடு செய்திருப்பவர்களுக்கு, 5.1% வட்டியையும், மூன்று முதல் ஐந்தாண்டு கால முதலீடுகளுக்கு 5.3% வட்டியையும், ஐந்து முதல் பத்தாண்டுகால தொடர் முதலீடுகளுக்கு 5.4% வட்டி விகிதங்களை வழங்கி வருவதாகவும், எஸ்பிஐ வங்கியின் இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
நிரந்தர வைப்புத் திட்டங்களில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் மூத்த குடிமக்களை கவரும் விதமாக, அவர்களுக்கு அதிகபப்டியான வட்டி விகிதங்களை அளித்து வருகிறது. மூத்த குடிமக்களின் முதலீடுகள், ஒன்று முதல் இரண்டாண்டுகள் வரையிலான வைப்புத் திட்டம் எனில், 5.6 சதவீத வட்டியினையும், மூன்று முதல் ஐந்தாண்டுகளில் எனில், 5.8% வட்டியினையும், ஐந்து முதல் பத்தாண்டுகள் எனில், 6.2% வட்டியினையும் அளித்து வருகிறது.
உதாரணமாக, இத்திட்டத்தில் பயணடைய விரும்பும் பயனாளர் 60 வயதுக்கும் குறைவாக இருப்பவர் எனில், மாதம் 1000 எனும் வீதத்தில் பத்தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக செலுத்தி வர, திட்டத்தின் முதிர்வு காலத்தில் அவர் 1,20,000 ரூபாயை முதலீடாக செலுத்தி இருப்பார்.
இத்திட்டத்தில் அவருக்கு வழங்கப்பட்ட 5.4 வட்டி விகிதத்துக்கான தொகை 39,157 ரூபாயை வருவாயாக பெறுகிறார்.
திட்டத்தில் பயனடைய விரும்புபவர், மூத்த குடிமக்களில் ஒருவராக இருந்தால், அவருக்கான வட்டி வருவாய் 6.2 சதவீதத்துக்கான தொகை 46,231 உடன் 1,66,231 ரூபாயை திட்டத்தின் முதிர்வு பயனாக பெறுகிறார்.