Advertisment

C.Raja Mohan Writes : இந்தியா- சீனா சமம் என்ற கருத்தே ஒரு மாயை

ஆனால், தேசப் பதட்டங்களை உறிந்துக் கொள்ளும் , லேசான வளைந்து போகக்கூடியதாய் இருப்பது தான் இந்தியாவின் பலமாகும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
70th anniversary of the founding of PRC

70th anniversary of the founding of PRC

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட  70 வது ஆண்டு நிறைவை இன்று சீனா மிகவும் இராணுவ ஆடம்பரத்தோடும், தேசியவாத பெருமையோடும் கொண்டாட உள்ளது. இந்த தருணத்தில்,  இந்தியா அதன் வடக்கு எல்லையில் இருக்கும்  சீனாவின் அசாதாரண மாற்றத்தை பிரதிபலிக்க வேண்டும்.

Advertisment

பிராந்திய அளவிலும், உலக அளவிலும், சீனாவின் வளர்ச்சிப் பாதை 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே இந்தியாவை உற்சாகப்படுத்திகிறது, ஏன்... குழப்பமடையவும்  செய்கிறது. சீனாவின் இந்த பரிணாமம் நான்கு பரந்த கருப்பொருள்களை முன்வைத்து யோசிக்க வேண்டும்.

முதலாவது, சீனாவின் பிரமிக்க வைக்கும் பொருளாதார அதிசயம். மிகவும் குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் வெற்றியடைந்த சீனாவிற்கு அதற்கான பாராட்டுகளைக் கொடுக்க வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது. மாவோவின் பொருளாதார சோதனை சமூக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், 1970 களின் இறுதியில் டெங் சியாவோபிங் தொடங்கிய பொருளாதார  சீர்திருத்தம் மற்றும் உலக வரத்தகத்தில் சீனாவை  முன்னிலைப்படுத்திய விதம் சீனாவை இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாற்றியிருக்கிறது. பொருளாதாரத்தின் மொத்த அளவின் அடிப்படையில் சீனா அமெரிக்காவை முந்தும் என்கிற செய்து இனி அதிர்ச்சி அளிக்கப் போவதில்லை. ஒரு ஏழ்மையான நாடு வளர்ந்த நிலைக்குச் சென்றக் கதை நமக்கு புதியதில்லை என்றாலும், அந்த பயணத்தை நான்கு சாகப்தங்களில் அடைந்த முதல் நாடு சீனா என்றே சொல்லலாம்.

இந்தியாவில் இருக்கும் பலர், இந்த வளர்ச்சியைக் கண்டு வியப்படையவில்லை என்றே தோன்றுகிறது. எப்போதெல்லாம் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பேசும்போதெல்லாம் அந்த நாட்டின் அரசியல் சிந்தாந்தங்ககளின் குறைகளை முன்னிலைப்படுத்திகின்றனர். அல்லது, ஜனநாயகத்திற்குக் கொடுக்கப்பட்ட விலையினால் தான் இந்தியாவில் அந்த அளவிற்கு முன்னேற்றம் இல்லை என்ற பேச்சோடு தங்களது ஆய்வை முடித்துக் கொள்கின்றனர். நியாமாக, நிதானத்தோடு யோசித்தால் சீனா எடுத்த வேகத்தைபோல் இந்தியாவின் பொருளாதார உற்பத்தியையும் வேகப்படுத்தியிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆசியாவின் பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனைகள் சற்று தயக்கமாகவும், ஆக்கப்பூர்வ மற்றவைகளாகவும் இருந்தன. மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும் போது, உலக பொருளாதாரப் பிணைப்புகளில் புதியதாய் அடியெடுத்து வைக்கும் இந்த ஆசிய நாடுகள் என்ன செய்யப் போகின்றன? இவைகளால் தாக்குப் பிடிக்கமுடியுமா? என்ற கேள்விகள் தான் அதிகம் தென்பட்டன. இந்த கேள்வியை மிகவும் சுக்குநூறாய் உடைத்தது சீனா தான்.  ஏன்.... 90 களில் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் உலகைத் திரும்பி பார்க்க வைத்தன. கல்விக் கொள்கைகளிலிருந்து ராணுவ செயல்பாடு வரை சீனாவைப் போல் விரிவான,ஆழமான சீர்த்திருத்தற்கு இந்தியா  முன்வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால், இந்த சீர்திருத்த வெற்றிக் கதைகள் சீனாவின் அரசியல் கட்டமைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்றே சொல்ல வேண்டும். இது சீனாவைப் பற்றிய யோசனனையில் இது இரண்டாவது கருப் பொருள்களுக்கு அழைத்துச் செல்கிறது.

பல தரப்பட மக்களையும், நிலப் பிரதேசங்களையும் ஒருநாட்டு சிந்தாந்தம் என்ற அடையாளத்துக்குள் கொண்டு வந்தாலும், சிஞ்சியாங் மற்றும் திபெத் போன்ற மத சிறுபான்மையினர் பற்றியக் கேள்விகளுக்கு சீனாவின் பதில் இன்றும் தடுமாற்றமாகவே இருந்து வருகிறது.

ஹாங் காங் மீது  முழு ஸ்திரத் தன்மையைப் புகுத்துவதில் சீனாவிற்கு வெற்றிக் கிடப்பதாய் தெரியவில்லை . ஒரு நாடு, இரண்டு நிர்வாகம் என்ற கணக்கில் வாழுந்துவரும் ஹாங் காங்கின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்க அது எடுத்த சமிபத்திய முயற்சிகளின் தோல்வியை நாடரியும். இந்த தோல்விகள். தைய்வானை முழு சீனாவின் ஸ்திரதன்மைக்குள் கொண்டு வரும் முயற்சியைக் கேள்விக்குறியாக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. என்ன இருந்தாலும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி அங்கு வலுவான மிடில் கிளாஸ்சை உருவாக்குவதல், ஜனநாயக வேட்கைகான போராட்டம் தற்போது அங்கு வலுப்பட வாய்ப்பில்லை .

சீனாவிற்கு அரசியல் புத்திமதி சொல்வதை இந்தியா நேர்த்தியாக தவிர்த்தது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், தேசிய ஒற்றுமை மற்றும் பிராந்திய இறையாண்மையை பலப்படுத்துதல்  இந்தியா தனக்குள்ளே ஆயிரத்தெட்டு குழப்பங்களை எதிர்க் கொண்டுவருகிறது.  ஆனால், 'ஒரு பெரிய தேசத்தை ஆளுவது ஒரு சிறிய மீனை சமைப்பது போன்று எளிமையானது ' என்ற சீனா பழமொழி இந்தியாவிற்கும் நிச்சயமாக கைக் கொடுக்கும்.

முந்தைய சீன அதிபர் டெங் சியாவோபிங் ஒரு நாடு இரு நிர்வாகம், பொருளாதார  வளர்ச்சி மூலம் அரிசயல் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும் என்பதை நம்பினார், ஆனால், தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் ஆக்ரோஷத்தோடு வலுவான ஆனால் உடையக் கூடிய சீனாவை உருவாக்கி வருகிறார். ஆனால், தேசப் பதட்டங்களை உறிந்துக் கொள்ளும் , லேசான வளைந்து போகக்கூடியதாய் இருப்பது தான் இந்தியாவின் பலமாகும்.

மூன்றாவதாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய திறன்களை வளர்ப்பதற்காக  சீனாவின்  அர்ப்பணிப்பை நாம் கவனித்தாக வேண்டும். மத மற்றும் சமூக வழக்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுபடுவது மிக முக்கியமானது என்பதை தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்றுமே உணர்தவர்களாய் உள்ளனர். சரியாக ஒரு நூற்றாண்டுக்கு முன்னர், நடந்த மே நான்காவது இயக்கம் மாநாட்டில்  நவீனமயமாக்கலின்  அடிப்படை குறிக்கோள்களை "மிஸ்டர் கன்பூசியஸை"  இருந்து " மிஸ்டர்  ஜனநாயகம் மற்றும் மிஸ்டர்  அறிவியல்" என்று மாற்றப் படவேண்டும்  என்று வரையறுத்தது. மிஸ்டர் ஜனநாயகம் மழுப்பலாக இருந்தாலும் , மிஸ்டர் சயின்ஸ் சீனா மண்ணில் செழிப்படைந்தது  என்றே சொல்லவேண்டும். சீனாவின்  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இந்தியாவில் குறைவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், தரவு பகுப்பாய்வு, செயற்கை உயிரியல், புதிய பொருட்கள் மற்றும் விண்வெளி அறிவியல் போன்ற வளர்ந்து வரும் பல பகுதிகளில் சீனா ஆக்ரோஷா  நிலையை  அடைய நினைக்கின்றது/ அடைந்து வருகின்றது .

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீடுகளில் கவனம் செலுத்திய விதம்,உயர்கல்வி முறையை நவீனமயமாக்க முயற்சி, அறிவியல் வளர்ச்சியில் இராணுவத்தை ஒரு முக்கிய பங்குதாரராக மாற்றிய விதங்கள் எல்லாம்  சீனாவை விஞ்ஞான சக்தியின் அடையாளமாக  மாற்றியுள்ளது.

கன்பூசியனிஸத்தின் மிகக் கடுமையாக எதிர்த்தவர் மாவோ, அதன் சிறப்பு வாய்ந்த சீனாவின் காலாச்சாரப் பாரம்பரியத்தை எதிர்த்து அழிக்கும் அளவிற்கு மாவோவின் எதிர்ப்பு இருந்தது. மாவோவிற்கு பின்பு வந்தவர்களும் பழங்கால கன்பூசியனிஸத்திற்கும், அறிவியலுக்கும் இரண்டையுமே பாதுக்காத்தனர். ஆனால் , இந்தியாவில் இதுபோன்ற பழமை சிந்தனைகளுக்கு எதிரான எதிர்ப்பை முதன்மைபடுத்தப் படவில்லை . தனது, நிலப்பிரபுத்துவதற்கு  எதிரான சண்டையில் இந்தியாவிற்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. நிலப்பிரபுத்துவத்திற்கான எதிரான போராட்டத்தின் வெளிப்பாடாகத் தான்  தான் சீனாவின் இன்றைய அறிவியல் வளர்ச்சியைக் காண முடிகிறது.

சீனாவின்,  தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் காலனித்துவ சகாப்தத்தால் அரிக்கப்பட்ட சீனாவின் "செல்வத்தையும் சக்தியையும்"  மீட்டெடுப்பதற்கான தீர்மானத்தை வகுத்தனர்.  பழையதை மீட்பதற்காகத் தான் உலக பொருளாதார சந்தையில் நுழைந்தனர். ஆரம்ப நாட்களில், மேற்கத்திய நாடுகளில் இருக்கும் பலரும் சீனாவின் பொருளாதார உயர்வைப் போற்றி ஊக்குவித்தாலும், பெய்ஜிங்கின் தற்போதைய ஒரு பெரிய சக்தியாக மாறியிருக்கிறது என்கிற செய்தி அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தான் ஏற்படுத்திகிறது.

மேற்கத்திய நாடுகள் வகுத்த விதிகளின்படி சீனா விளையாடும், அவர்கள் கொடுத்த  அந்தஸ்தை ஏற்றுக் கொண்டு எப்போதும் பணிந்து போகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ஒரு மாயையாக மாறிவிட்டது. சீனா இப்போது தனது சொந்த உரிமையில் ஒரு பெரிய சக்தியாக உள்ளது, மேலும் உலகத்தை தனது சொந்த விதிமுறைகளால் சமாளிக்க விரும்புகிறது. சீனாவின் வளர்ச்சியையும், சக்தியையும் ஏற்றுக் கொள்ள முடியாததால் தான்  எண்ணிலடங்கா பகைமை தற்போது சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் உருவாகி வருகின்றது. இதன் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே நாளைய நாட்களின்  சர்வதேச உறவுகளை வடிவமைக்கும்.

மேற்கத்திய நாடுகளைப் போன்றே, இந்தியாவும் சீனாவின் உலகளாவிய அதிகாரத்தை ஏற்க மறுக்கிறது, உணர மறுக்கிறது. சீனாவும் , இந்தியாவும் அனைத்திலும் சமமே என்ற மாயக் கருத்தால் சீனாவின் அடிப்படையை நாம் புரிந்துக் கொள்ளமல் போகின்றோம். அதோடு மட்டுமல்லாமல், சீனாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள இடைவெளியால் ஏற்படும் தாக்கங்களைக் கூட  என்னதென்று அறியாமலே இந்நாடு உள்ளது . இந்த இடைவெளியைக் குறைப்பது தான் நாளைய நாட்களில் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment