Leher Kala
Abhijit Banerjee astonishingly good cook : வீட்டில் சமையல் என்பது இனிமேல் ஆண்களுக்கு மட்டுமே அல்லது பெண்களுக்கு மட்டுமே என்றில்லை. நம்மில் பலர் அத்திறனை பெண்கள் மட்டுமே கொண்டிருப்பதாக கருதுகிறோம். சமையல் கலை என்பது திறமையின் அடிப்படையாக அமைந்திருந்தாலும் அதை செய்வது சிரமமானது தான். பொருளாதாரத்தில் நம் நாட்டைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜி நோபல் பரிசு பெற்றவர் என்பது மட்டும் தான் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் சமைப்பதிலும் அவர் கைந்தேர்ந்தவர் என்பது தான் ஆச்சரியப்பட வைக்கும் புதிய தகவல். அபிஜித் பானர்ஜியின் சகோதரர், அவரின் சமையல் திறனை பற்றி குறிப்பிட்டு “அற்புதமான நல்ல சமையல்காரர்” என்று தெரிவித்துள்ளார். கைதேர்ந்த சமையல் மாஸ்டரைப் போல 4 வேளையும் உணவுகளை மிகுந்த ஈடுபாட்டுடன் எளிமையாக சுவையாக சமைப்பதில் அபிஜித் பானர்ஜி வல்லவர் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் சாதனைகள் பொருளாதாரத்துறையோடு நின்று விடவில்லை என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. நோபல் பரிசு வென்றவர்கள் தனித்துவமிக்க பிறவிகள் என்பதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் இருக்க வாய்ப்பில்லை. பொருளாதாரத் துறையின் மூலம் உலகின் வறுமை நிலையைப் போக்க அவர் கையாண்ட ஆராய்ச்சி மனப்பான்மை, நெறிமுறை, கோட்பாடுகள் போல, சமைப்பதிலும் அதற்குறிய நெறிமுறைகளை அவர் கையாண்டிருப்பார் என்பதுதான் இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய வி~யம். இதுவரை இந்த நவினயுகம் அறிந்திராத வகையில் உலகளாவிய வறுமை ஒழிப்புக்கான கோட்பாடுகளை அறிவியல் மனப்பான்மையுடன் பொருளாதார சித்தாந்தத்தின் அடிப்படையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி, அதிலும் சாமானிய ஆண்கள் கூட செய்ய தயங்கும், சமையலை சுவைபட சமைப்பதில் கைதேர்ந்தவராக இருந்ததன் மூலம் படைப்பிலேயே அவர் திறமையானவர் என்பதே உண்மை.
நல்ல கணவராகவும், அதே வேளையில் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் சமைக்கும் திறன் படைத்தவராக அபிஜித் பானர்ஜி இருந்தது, அவரது மனைவி செய்த அதிர்~;டமே என்று கூட எண்ணத் தோன்றுகிறது. கற்பனையாக வைத்துக் கொண்டாலும், அப்படிப்பட்ட திறன் ஒரு சேர ஒருவரிடம் இருந்தாலும், அவரின் வாழ்க்கைத்துணை அதில் ஏதாவது ஒன்றைத்தான் மிகவும் விரும்பும். பெரும்பாலான பெண்கள் தங்களது கணவன்மார்கள் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்களாக இருப்பதைவிட சுவைபட சமைப்பத்தில் வல்லுநர்களாக இருப்பதையே விரும்புவார்கள். சமீபத்தில் கூட “வாட்ஸ் அப்பில்” பரவிய ஒரு செய்தியில் “வயது வந்த ஒருவரின் வாழ்க்கையில் கடினமான காலம் என்பது உனது இறுதிக்காலம் வரை ஒவ்வொரு நாள் இரவும் என்ன உணவு சமைப்பது என்பதை முடிவு செய்வதே என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.
உண்மையிலேயே அந்த கருத்து வாழ்வியல் தொடர்பான அரிய சிந்தனையின் வெளிப்பாடு தான். இத்தகைய அரியதொரு பொறுப்பினை (நல்ல உணவை சமைக்கும்) ஏற்றுக் கொள்ளும் மனிதன், ஒரு கருவூலமாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியவனே. ஏனேனில் இன்றைய சமுதாயத்தில் அவனது சேவை அதிகம் தேவைப்படும் நிலையில் உள்ளது. நீங்களே சமையல் செய்வதை விரும்புபவர்களாக இருந்தாலும், தினந்தோறும் அதை செய்வதென்பது மிகவும் விரக்தியாகத்தான் தெரியும். சமையலைப் போன்றே வீட்டில் அன்றாடம் நடைபெறும் மற்ற வேலைகளும் கடும் உழைப்பைச் சார்ந்தே உள்ளன.
இவை பெரும்பாலும் இல்லத்தரசிகளின் குறிப்பாக பெண்களின் சுமையாகவே உள்ளது. நம் நாட்டில் முந்தைய தலைமுறைகளில் திருமணமான ஆண்களுக்கு தங்களுக்கு தேவையான வெந்நீரை தாங்களாகவே கொதிக்க வைக்க தெரியாதவர்களாகவே இருந்துள்ளனர். இருப்பினும் இவர்கள் தங்கள் வீட்டு பெண்கள் சமைக்கும் உணவை கடுமையாக வார்த்தைகளால் குறை சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அத்தகைய ஆண்களின் இத்தகைய நிலைக்கு அவர்களது தாயார்களின் அதிகப்படியான செல்லமே காரணம். ஆனால் தற்போது அவர்கள் ஒரளவு நல்ல சமைக்கத் தெரிந்த ஆண்களாக மாறிவிட்டனர். இந்த மாற்றம் காலப்போக்கில் வாழ்க்கையோட்டத்துடன் நிரந்தரமாகி விட்டது என்றே கூறலாம்.
தற்போதைய தாய்மார்கள் ஏதாவது அலுவல் பணியிலோ, சொந்த தொழிலிலோ, வர்த்தகத்திலோ இருப்பதால், தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் சுவைபட விரும்பிய உணவு வகைகளை தயாரித்து வழங்க நேரமோ அல்லது விருப்பமோ இருப்பதில்லை. உண்மையிலேயே சொல்வதென்றால், மணவாழ்க்கை என்பது பொறுப்புகளையும், பணிகளையும் கணவன் - மனைவியிடையே பிரித்துக் கொண்டு செயல்படுவதில் தான் உள்ளது. ஆனால் நடைமுறையில், ஒவ்வொரு வீட்டிலும் ஆண்கள் வெளியில் இருந்து வீட்டிற்கு தேவையான பொருள் ஈட்டுபவர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமையல் போன்ற வீட்டு வேலைகளை செய்ய பெண்கள் அனுமதிப்பதில்லை.
வீடுகளில் தொலைக்காட்சிகளில் அன்றாடம் நாம் சமையல் நிகழ்ச்சிகளில் சமையல் போட்டிகளில் ஆண்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெறுவதை பார்த்தாலும், நடைமுறையில் சாதாரண இந்திய மனிதனின் சமையலறை பங்கு இன்னும் சொல்லும் படியாக இல்லையென்றே கூறலாம். பெரும்பாலான மனிதர்கள் வாரவிடுமுறை நாட்களில் சமைப்பதை மிகவும் மகிழ்ச்சியாக கருதுகிறார்கள். அதே வேளையில் வாரவிடுமுறை நாட்களில் ஷாப்பிங் மற்றும் உணவகங்களுக்கு செல்வதென்பது வாரம் முழுமையும் வீட்டில் உணவுக்காக செலவிடும் தொகையை விட அதிகம்.
சமைப்பதை பொழுதுபோக்கு அம்சமாக மேற்கொண்டால் அது மிகவும் சுலபமாக அமைந்துவிடும். எனவே அதை மிகவும் சிரத்தையாக, சொல்வதென்றால், யூடியூப்பில் வருவதைப் போன்று சமையல் கலையில் விதவிமான உணவுகளையும், புதிய வகைகளையும் வாரத்தில் ஒரு முறையாவது விரும்பி சமைக்க பழக வேண்டும். ஒரு நல்ல சமையல் கலைஞர், சாதாரண பருப்பின் சுவையை தனது சமையல் மூலம் மாற்ற முடியும். இதே போல தான் குளிர்சாதன பெட்டியிலிருக்கும் உணவு பொருட்களை எடுத்து சமைக்கும் போது, அதன் சுவையை அதிகரிக்கவும் இயலும்.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
இந்த திறனை தான் ஸ்டார் டிவி சமையல் கலை நிகழ்ச்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மார்ட்டின்; ஆண்களை சமையல் கலையில் ஊக்கப்படுத்தும் வகையில் “உங்களால் சமைக்க முடியுமென்றால் முடியும்” என்ற தலைப்பில் நடத்துவதை பார்க்கலாம். அவர் சொல்ல வருவது இதுதான். உண்ணுபவர்களின் தேவை அறியாதவகையில் சமைப்பவர்களின் வரிசையில் இருந்துதான் நான் வந்துள்ளேன். சராசரி சுவையுடன் கூடிய உணவு பெரும்பான்மை மக்களை மகிழ்விப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளவே எனக்கு நாள் பிடித்தது. தற்போது நான் பழங்கால இந்திய கலாச்சாரத்துக்காக ஏங்குகிறேன்.
அப்போதெல்லாம் இரவு விருந்தை பற்றி புகார் கூறினால் பெரும்பான்மையாக குழந்தைகள் இரவு உணவு கூட இல்லாத நிலையில் விருந்தை குறை சொல்லும் நிலை தேவைதானா? என்று கண்டிப்பும் இருந்தது. ஆனால் தற்போது நாமே நமது குழந்தைகளை விதவிதமான உணவு பழக்கங்களுக்கு ஆட்படுத்திவிட்டு, அவற்றை வீட்டில் சமைத்தே கொடுப்பதென்பது இயலாத ஒன்றாகிவிட்டது. இந்த நிலைக்கு பெற்றோரே காரணம். எனவே வீட்டில் உண்ணத்தக்க, ஆரோக்கிய உணவுகளை வகைவகையாக சமைப்பது என்பது கணவன் - மனைவி இருவரின் கடமையாகும். எனவேதான் மேற்கத்திய நாட்டு மணவாழ்க்கையில் அடிக்கடி முறிவுகள் ஏற்படுகின்றன என்கிறார். எனவே இன்றைய இல்ல பெண்கள் வேண்டுவது சமையலறை பொறுப்பை பகிர்ந்து கொள்ளும் கணவன்மார்களைதான்!
தமிழில்: த.வளவன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.