ஃப்ரான்ஸ் குரோசியாவினை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால் இரண்டு நாடுகளுமே சாம்பியன்கள் தான். ஃப்ரான்ஸ் மக்கள் மிகவும் மகிழ்ச்சி, குரோசிய மக்களோ மகிழ்ச்சியோடு கூடிய பெருமையினை கொண்டாடி வருகிறார்கள்.
ஃபிரான்ஸ் நாட்டினை அனைவருக்கும் தெரியும். காதல் தலைநகரம் பாரிஸைனையும், அழியாப் புகழ் பெற்ற ஈஃபில் கோபுரத்தினையும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 5 வாக்கு அளிக்கும் இடத்தினையும், ஐரோப்பிய யூனியன், நாட்டோ, ஜி7 அனைத்திலும் இருக்கிறாது ஃப்ரான்ஸ்.
ஆனால் குரோசியாவைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? முன்பொரு காலத்தில் யுகோஸ்லோவியா என்ற நாட்டில் மிகவும் சிறிய பகுதியாக இருந்தது குரோசியா. இன்று யுகோஸ்லோவியா என்ற ஒரு நாடு இல்லை. அது குரோசியா, ஸ்லோவேனியா, போஸ்னியா, ஜெர்ஸேகொவினா, மோண்டெனெக்ரோ, செர்பியா, கொசாவோ, மசிடோனியா என்று பிரிந்து கிடக்கிறது.
ப்ரான்ஸ் குரோசியாவினை விட 10 மடங்கு பெரிய நிலப்பரப்பினை கொண்டது, ப்ரான்ஸின் மக்கள் தொகையோ குரோசியாவினை விட 15% அதிகம். உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி குரோசியாவினை விட 50% அதிகம். 2582 பில்லியன் டாலர்களுக்கும் 55 பில்லியன் டாலர்களுக்கும் இடையேயான வித்யாசம் அது.
மிகச் சிறிய நாடு, மிகப் பெரிய நாட்டுடன் போட்டியிட முடியுமா? அவர்களுக்கு மிகப் பெரிய நிலம், மிகப் பெரிய மக்கள் தொகை, மற்றும் ராணுவ படையினை கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர்களின் மக்கள் அதை கணக்கில் கொள்ளாமல் ஃபிரான்ஸ்சினை எதிர்க்கும் துணிவுடன் களத்தில் இறங்கியது குரோசியா.
குரோசியாவின் மக்கள் தொகை வெறும் 41,25,700 தான். கான்பூரில் இருக்கும் மக்கள் தொகை தான் இது. அவர்களின் தனி நபர் வருமான 13, 295 டாலர் ஆகும். அது ஒரு மத்திய வருமானத்தை கொண்ட நாடாகும். 91-95ல் போரில் மிகவும் பாதித்து பின்பு தானாக மீண்டு வந்தது குரோசியா.
குரோசிய மக்கள் நெடு நாட்கள் வாழ்கின்றார்கள். ஆரோக்கியமாகவும், குழந்தைகள் பெற்றுக் கொண்டும், கவலைகள் ஏதுமின்றி வாழப் பழகியவர்கள். மிகவும் சிறிய நாடு, தினமும் அந்நாட்டினைப் பற்றி தினமும் செய்திகள் வரவேண்டிய அவசியம் இல்லை.
இந்த உலகில் சுமார் 195 நாடுகள் இருக்கின்றன. அதில் 107 நாடுகளின் மக்கள் தொகை சுமார் 10 மில்லியனுக்கும் குறைவாக தான் இருக்கிறது. அவர்களின் வாழ்வு மிகவும் மகிழ்ச்சியானதாகவும் சிறப்பாகவும் இருக்கிறது. குரோசியா உலகக் கோப்பை இறுதி சுற்றுக்கு வர, நைஜீரியா, அர்ஜெண்டினா, ஐஸ்லாந்து, டென்மார்க், ரஷ்யா, இங்கிலாந்து, மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளுடன் போட்டியிட்டது குரோசியா. மற்ற ஸ்விட்சர்லாந்து நாட்டினுனான ஆட்டத்தை மட்டும் ட்ராவில் முடித்துவிட்டு, மற்ற அணிகளை வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சிறிய நாடுகள் போலவே சில பெரிய நாடுகளும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்கிறது. உதாரணம் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அந்த வரிசையில் இப்போது இடம் பிடித்துள்ளது சீனா.
ஒரு நாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என மற்றொரு நாட்டினைப் பார்த்துக் கற்றுக் கொள்ள இயலாது. ஆனால் பன்முகத் தன்மையினைக் கொண்ட இந்தியா போன்ற நாடு மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகவாது செயல்பட வேண்டும்.
மதம், மொழி, இனம் என்ற அனைத்திலும் வித்யாசப்படும் இந்நாட்டில் அதிகாரம் அனைத்தையும் தன் வசம் கொண்டிருக்கிறது மத்திய அரசு. மாநில அரசுகளுக்கு குறைவான அதிகாரம் மற்றும் வளங்களையே தருகிறது மத்திய அரசு.
இயற்கை வளங்களான நிலக்கரி, கனிம வளம் ஆகியவற்றில், அதை வைத்திருக்கும் மாநிலத்திற்கு அதிக உரிமையினை தருதல் நலம் அளிக்கும்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி போன்ற வரிகள் குறித்து சேர்ந்து ஆலோசித்து சிறப்பான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
தனியுரிமை: கல்வி, சுகாதாரம், விலைவாசி நிர்ணயம், மக்களுக்கான நலத்திட்டம் என அனைத்திலும் மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்படவிடும் பட்சத்தில் நம்முடைய நாடும் நல்ல முன்னுதாரணமாக செயல்படும் என்பதில் ஐயம் இல்லை
முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழிற்காக எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
தமிழில் நித்யா பாண்டியன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.